கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, August 20, 2011

அழிக்க நினைப்பவர்களே அழிந்து போவார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு




காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் புத்தேரி தெருவில் 19.08.2011 அன்று நடந்தது.
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், நகர செயலாளர் ஆர்.சேகர், மாவட்ட அவைத்தலைவர் சுந்தர், துணை செயலாளர்கள் பொன்மொழி, எட்டியப்பன், பொருளாளர் சுகுமார், முன்னாள் நகராட்சி தலைவர் சன்பிராண்டு ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் மற்றும் ராமகிஷ்ணன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், பருத்திக்குளம் இளைஞர் அணி செயலாளரும், கருப்படைதட்டடை ஊராட்சி மன்ற துணை தலைவருமான எஸ்.எம்.பொன்னா (எ) வெங்கடேசன் & சவுமியா திருமணத்தை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். பின்னர் மணமக்களை பல்லாண்டு வாழ வாழ்த்தினார். மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் சுந்தர், வைத்தியலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் பொன்மொழி, எட்டியப்பன், பருத்திகுளம் ஊராட்சி தலைவி முருகம்மாள் சுப்பிரமணி, மணமக்களின் உறவினர்கள் அன்பழகன், அறிவழகன் உள்பட பலர் மண மக்களை வாழ்த்தினர்.

விழாவில், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மாணவர்களும், இளைஞர்களும் வாழ்வில் வசந்தம் பெற அதற்குரிய கல்வி பெற்றிருக்க வேண்டும். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் ஒரே சீரான கல்வியை பெறுவதற்கு திமுக போராடியது. இந்த தேர்தலில் வெற்றியை இழந்திருந்த நிலையில், தோற்றுப் போனதால் திமுக மூலையில் முடங்கி விடும் என்று ஜெயலலிதா நினைத்தார். அவர் நாலே முக்கால் ஆண்டு கொடநாட்டில் முடங்கியதை மறந்து விட்டார். இந்தியாவில் எந்த மாநிலத்தில் செய்யாத திட்டங்களை நிறைவேற்றி சாதனைகள் படைத்தவர் கலைஞர் கருணாநிதி.
தேர்தல் அறிக்கையில் கூறியதை 100 சதவீதம் நிறைவேற்றிய ஒரே கட்சி திமுக. தேர்தலில் தோல்வியடைந்தால் அந்த கட்சி எழுந்து நிற்க ஒரு ஆண்டுகள் ஆகும். ஆனால் தோற்ற 10, 15 நாட்களிலே மகிழ்ச்சியோடு மக்களை சந்திக்கின்ற ஒரே கட்சியாக இருக்கின்றோம். மாணவர்களின் எதிர்கால நலன் கருதி சமச்சீர் கல்வியை கொண்டு வந்தோம். தமிழகத்தில் நான்கு வகையாக நடத்தப்படும் பாடத்திட்ட கொடுமையை நீக்கவும், அனைவருக்கும் சீரான கல்வியை பெறுவதற்காகவும் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தோம்.
தாந்தோணித் தனமாக இந்த திட்டத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. கல்வியாளர்கள், அறிவாளர்கள் என பல்வேறு தரப்பட்ட குழுக்கள் அமைத்து இந்தியாவின் பல மாநிலங்களுக்கு அந்த குழு அனுப்பப்பட்டு ஆராய்ந்து இந்த முடிவை அமல்படுத்த நினைத்த போது, நீதிமன்றத்துக்கு சென்றார்கள். பின்னர் தேர்தல் வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதாவின் முதல் அறிவிப்பிலேயே திமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் அடியோடு ரத்து செய்யப்படும் என அறிவித்தார். எந்த ஆட்சி நடந்தாலும் மாணவர்களின் அடிப்படை அறிவை பாதிக்கக் கூடியவற்றை செய்யக் கூடாது. நாங்கள் மாணவர்களுக்காக அக்கறையோடு செயல்பட்டோம். திமுகவை அழிப்ப தற்கு அரசியல் அனாதைகள், அகதிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
அண்ணா பிறந்த இந்த மாவட்டத்தில் இருந்து சொல்கிறேன். திமுகவை அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். ஒட்டுமொத்த மக்களின் பிரச்னைக்காக பாடுபடுகிற கட்சி திமுக. 1975ம் ஆண்டு நெருக்கடி நிலை ஏற்பட்டது. பிரதமராக இருந்த இந்திராகாந்தி தன்னை பாதுகாத்து கொள்ள அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தினார். அப்போது திமுக ஆட்சியை இழந்தது. பல தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். நானும் சென்னை சிறையில் சிட்டிபாபுவுடன் அடைக்கப்பட்டிருந்தேன். காவலர்கள் என்னை தாக்கும் போது, அவர் மறித்து நின்று எனக்காக அடி வாங்கியவர். அவர் இல்லை என்றால் காஞ்சிபுரத்தில் இன்று உங்களோடு பேசியிருக்கமாட்டேன்.
திமுக பல போராட்டங்களை சந்தித்த இயக்கம். 2016ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவோம். மன்னிக்க வேண்டும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டத்தை தொடர்ந்து புதிய தலைமை செயலக வெற்றி விழா கூட்டமும் நடத்த வேண்டியிருக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பற்றி முதல் அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்.

தேர்தலில் தோற்றாலும் மக்களை சந்திக்கும் ஒரே இயக்கம் திமுகதான். 1949&ல் ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி திமுக. ஆட்சிக்காகவும், பதவிக்காகவும் இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. ஏழை எளிய மக்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என அனைத்து தரப்பு மக்களுக்காக பாடுபடும் கட்சியாக திமுக செயல்படுகிறது. அரசியல் அனாதைகளும், அகதிகளும் திமுகவை அழிக்க நினைக்கிறார்கள். திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. காஞ்சியில் மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளான். காவல்துறை அதிகாரி வீட்டில் கொள்ளை நடக்கிறது. தற்போதைய ஆளும்கட்சி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் மீது சொத்து அபகரிப்பு தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. அது சமரசமாக முடிந்துவிட்டது என்கிறார்கள். அதிமுகவுக்கு மட்டும் சமரசம். திமுகவுக்கு கிடையாதா?
ஜெயலலிதாவுக்கு துணிச்சல் இருந்தால் நிலஅபகரிப்பு விவகாரத்தை 2001&ல் இருந்து விசாரிக்க முடியுமா?. விசாரித்தால் சிறுதாவூர் சிக்கிவிடும். கொடநாடு பட்டியலில் வந்துவிடும்.
திமுகவினர் மீது போடப்படும் பொய் வழக்குகளுக்கு காலம் பதில் சொல்லும். புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்தனர். அந்த வாக்குகள் தற்போது ஏமாற்றமாக மாறியுள்ளது. மக்களுக்காக பாடுபடும் ஒரே தலைவர் கருணாநிதிதான். அவர் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.
முடிவில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment