சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியை 09.08.2011 அன்று அறிவாலயத்தில் தேசிய லீக் கட்சி தலைவர் பசீர் அகமது, பொதுச்செயலாளர் அப்துல்காதர் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சமச்சீர் கல்வித் தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சமச்சீர் கல்வித் தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி 09.08.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒன்றேகால் கோடி மாணவ, மாணவியர்களும், அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூக நீதியில் அக்கறை கொண்டோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த சமச்சீர் கல்வி பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்து விட்டது.
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் திரும்பத் திரும்பச் சொல்லியும் அவைகளை எல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு திமுக ஆட்சி அறிமுகப்படுத்திய காரணத்திற்காகவும், ஆதிக்க வர்க்கத்துக்கு ஆதரவாகவும், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று, நீதிமன்றங்களே நாட்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, அந்த தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை விநியோகிக்க வேண்டுமென்று வலியுறுத்தியும் கூடக் கேளாமல், முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்த அதிமுக அரசுக்கு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மிகப்பெரிய பாடம் உச்ச நீதிமன்றத்திலிருந்தே கிடைத்துள்ளது.
இதே தீர்ப்பு திமுக ஆட்சியிலே உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அறிக்கை விடுத்திருப்பார் அம்மையார் ஜெயலலிதா. அதைப் போல நான் தற்போது அறிக்கை விடுவதற்கு விரும்பவில்லை.
இனியாவது இதுபோன்ற பிரச்னைகளில் ஜெயலலிதா தனது பிடிவாதப் போக்கினைக் கைவிட்டு நாட்டு நலன் கருதி தன்னுடைய அணுகுமுறைகளையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு செயல்படுவார் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சமச்சீர் கல்விக்கு கிடைத்த இந்த உச்சக்கட்ட வெற்றியை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment