நில அபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா உள்பட 5 பேரை ஜாமீனில் விடுதலை செய்து உயர் நீதிமன்றம் 22.08.2011 அன்று உத்தரவிட்டது.
நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா உள்பட 5 பேரை ஈரோடு பெருந்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள என்.கே.கே.பி. ராஜா ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி சுதந்திரம் கடந்த வாரம் விசாரித்தார். அப்போது மனுதாரர் சார்பாக வக்கீல் என்.ஜோதி, போலீஸ் தரப்பில் பப்ளிக் பிராசிகியூட்டர் ஐ.சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பை தள்ளிவைத்தார்.
இந்த வழக்கில் நீதிபதி சுதந்திரம் கூறியிருப்பதாவது:
வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது இது முழுவதும் சிவில் வழக்கு என்று தெளிவாக தெரிகிறது. எனவே மனுதாரர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்குகிறேன். அவர்கள் ^20ஆயிரத்திற்கான சொந்த ஜாமீனும் அதே தொகைக்கான இரு தனி நபர் ஜாமீனும் செலுத்தி ஈரோடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். திருச்சியில் தங்கியிருந்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment