மதுரை திமுக மாவட்டச் செயலாளர் தளபதி கடந்த 19.07.2011 அன்று நிலஅபகரிப்பு வழக்கில் கைது
செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து ஜாமீன் கோரி தளபதி சார்பில் மதுரை ஜெஎம்1 நீதிமன்றத்தில் ஜாமீன் மனு
தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் மாவட்ட நீதிமன்றதில் கடந்த 29.07.2011 அன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை 01.08.2011க்கு ஒத்திவைக்கப்பட்டது. 01.08.2011 அன்று மாலை மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி பாஸ்கரன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனால் தளபதி தரப்பினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுவை 08.08.2011 அன்று விசாரித்த நீதிபதி மாலா, தளபதியை ஜாமீனில் விட உத்தரவிட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதி, மூவரும் தினமும் ஜெ.எம்& 1 கோர்ட்டில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், தளபதியுடன் கைதான கொடி சந்திரசேகர், கிருஷ்ணாபாண்டியையும் ஜாமீனில் விட உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment