சமச்சீர் கல்வி திட்டத்தை போல் புதிய தலைமை செயலகம் விவகாரத்திலும் வெற்றி பெறுவோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
புதுக்கோட்டையில் 26.08.2011 அன்று மாவட்ட திமுக சார்பில், சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத் தோடு மக்கள் வாக்களித்து ஆட்சிமாற்றத்தை கொண்டு வந்தனர். அந்த மாற்றத்தால் மக்களுக்கு வெறும் ஏமாற்றம்தான் கிடைத்தது. கடந்த திமுக ஆட்சியில் திமுக தலைவர், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி மட்டுமின்றி வாக்குறுதியில் இல்லாத பல்வேறு திட்டங்களை 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். அதில் ஒன்றுதான் சமச்சீர் கல்வி திட்டம்.
கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வித்துறை அதிகாரிகள் என அனைவரையும் அழைத்து பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி கொண்டு வரப்பட்ட சமச் சீர் கல்வி திட்டத்தை அதி முக அரசு ரத்து செய்து முதல் தீர்மானமாக கொண்டு வந்தது. திமுக சார்பில் நான்தான் முதன்முதலில் குரல் கொடுத்து இந்த திட்டத்தை ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்தேன். இதன்பிறகு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இந்த திட் டத்தை உடனடியாக நிறை வேற்ற வேண்டும் என குரல் கொடுத்தன. கடைசியில் உச்சநீதிமன்றம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
சிறுதாவூர் நிலத்தை தலித் மக்களுக்கு கொடுக்காமலும், கொடநாடு எஸ்டேட்டில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தடுக்கும் ஜெயலலிதாவுக்கு திமுகவினர் மீது நில அபகரிப்பு மற்றும் பொய் வழக்கு போட தகுதி இல்லை. மிசாவை கண்டே அஞ்சாத நாங்கள் பொய் வழக்கிற்கா அஞ்ச போகிறோம்.
சமச்சீர் கல்வி திட்டத்தில் எப்படி நீதிமன்றம் மூலம் வெற்றி கிடைத்ததோ அதே போல புதிய தலைமை செயலக விவகாரத்திலும் வெற்றி பெறுவோம். அடுத்த தேர்தல் 2014ல் வந்தால் கூட அதற்கு முன்னதாகவே நீதிமன்றம் மூலம் அனைத்து தவறுகளையும் சுட்டிக்காட்டி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்வோம். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் யார் மூலம் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டதோ அவரையே மீண்டும் அந்த தலைமை செயலகத்தில் ஆட்சி பொறுப்பில் அமர வைப் போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு, முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், செல்வராஜ், எம்எல்ஏக்கள் கோவி. செழியன், லால்குடி சவுந்தரபாண்டியன், மன்னார்குடி ராஜா, கும்பகோணம் அன்பழகன், கம்பம் ராமகிருஷ்ணன், அரியலூர் சிவசங்கர், மாநில இலக்கிய அணி செயலாளர் கவிதைப்பித்தன், முன்னாள் எம்எல்ஏ சேகர்பாபு, நகர செயலாளர் வீரமணி, கேபிகே தங்கவேலு, சந்திரசேகரன், ராஜேஸ்வரி, செந்தில், பாலு, பழ.சுப்பையா, நைனாமுகமது, மாநில மகளிர் செயலாளர் விஜயா, அறந்தாங்கி ராசன், முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர் மதியழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment