மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரும், தென் மண்டல திமுக அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி 18 .08 .2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக சட்டசபையில் நேற்று (17&ம் தேதி) தொழில்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது துறையின் அமைச்சர் வேலுமணி, என் மீது அபாண்டமான, பொய்யான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். மதுரையை சுற்றியுள்ள கிராமங்களை வளைத்து, சில கூட்டாளிகளை சேர்த்து கிரானைட் தொழிலில் நான் ஈடுபட்டதாகவும், அது தற்போது மூடப்பட்டு விட்டதாகவும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் துணிந்து சட்ட சபையிலேயே பொய் குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார்.
நான் எந்த காலத்திலும் கிரானைட் தொழிலில் ஈடுபட்டவன் அல்ல. என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை அவர் நிரூபிக்க வேண்டும் அல்லது பொய் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால் அவர் தனது அமைச்சர் பதவியை மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும். சட்டசபையை தவறாக பயன்படுத்திய வேலுமணியிடம், என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கான தகுந்த ஆதாரங்களை கேட்டுப் பெற வேண்டும் என்று சட்டசபை தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஆதாரங்களை 15 நாட்களுக்குள் வழங்க தவறினால் வேலுமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அறிக்கையில் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment