திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் மற்றும் அவரது உதவியாளர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையை அடுத்த நொளம்பூரை சேர்ந்த செல்வமணி என்பவர் போலீசில் சில வாரங்களுக்கு முன்பு புகார் செய்தார். நொளம்பூர் ஏரி திட்டப்பகுதியில் உள்ள 20 ஏக்கர் நிலப்பரப்பில் குடியிருந்த 120 குடும்பங்களை திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், அவரது உதவியாளர் வெங்கடேசன்(எ) கவுரிசங்கர் மற்றும் சிலர் மிரட்டி காலி செய்ய வைத்துவிட்டு அந்த இடத்திற்கு போலி ஆவணம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதன், வெங்கடேசன் ஆகியோரை கடந்த 2ம் தேதி அதிகாலையில் கைது செய்தனர்.
பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்பாபு, கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், உதவியாளர் வெங்கடேசன் ஆகியோரை நில ஆக்கிரமிப்பாளர் தடுப்புச்சட்டத்தின் கீழ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி கமிஷனர் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரங்கநாதன், வெங்கடேசன் ஆகியோருக்கு சிறை சூப்பிரண்ட் மூலம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment