கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

வேலூர் மத்திய சிறையில் ரங்கநாதனுடன் ஸ்டாலின் சந்திப்புவேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதனை தி.மு.க பொருளாளரும், தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் 18 .08 .2011 அன்று சந்தித்து பேசினார்.
தமிழகம் முழுதும் நிலஅபகரிப்பு புகார்களின் பேரில் தி.மு.க முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பி.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் உட்பட பலர் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சமச்சீர் கல்வி அமல்படுத்துவது தொடர்பான போராட்டத்தின்போது சிறுவன் இறந்ததாக கூறி திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க முன்னணியினரை மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். அந்த வகையில் குண்டர் சட்டத்தின் கீழ் முன்னாள் எம்.எல்.ஏ புரசைவாக்கம் ரங்கநாதன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக மு.க.ஸ்டாலின் 18 .08 .2011 அன்று காலை வேலூர் மத்திய சிறைக்கு வந்தார். பகல் 11.50 மணிக்கு உள்ளே சென்ற ஸ்டாலின், ரங்கநாதனை சந்தித்து பேசிவிட்டு 12.40 மணியளவில் வெளியே வந்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இன்று வியாழக்கிழமை என்பதால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கைதிகளை பார்க்க முடியும். அதனால் ரங்கநாதனை சந்திக்க வந்தேன்.’ என்று கூறினார். தொடர்ந்து நிருபர்கள், ‘நேற்று முன்தினம் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ராஜீவ் கொலை கைதிகளை சந்திக்க வந்த போது, மரண தண்டனையில் இருந்து ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்க அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட போவதாக கூறியுள்ளாரே. இதில் தி.மு.க நிலைப்பாடு என்ன? என்று கேட்டனர்.
அதற்கு ஸ்டாலின், ‘இதுபற்றி ஏற்கனவே தலைவர் (கருணாநிதி) கூறியுள்ளார். அதுதான் எனது கருத்தும்’ என்று கூறியபடியே காரில் ஏறி சென்னை சென்றார். ரங்கநாதனை சந்திக்க ஸ்டாலின் சென்றபோது அவருடன் மாவட்ட தி.மு.க செயலாளர் காந்தி, சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் சென்றனர்.
முன்னதாக, 11.30 மணியளவில் வேலூர் மத்திய சிறை வாசலுக்கு மு.க.ஸ்டாலின் கார் வந்தது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தி.மு.க தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பி அவரை வரவேற்றனர். மாநகர தி.மு.க செயலாளர் அ.மா.ராமலிங்கம், மேயர் கார்த்திகேயன், முகமதுசகி, துணை மேயர் முகமதுசாதிக், ஒன்றிய செயலாளர் ஆர்.பி.ஏழுமலை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நந்தகுமார், வக்கீல் பார்த்தீபன், கவுன்சிலர் அசேன், தொரப்பாடி பேரூராட்சி துணைத் தலைவர் திருமால், கவுன்சிலர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment