கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

அவதூறு செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கு ஸ்டாலின் நோட்டீஸ்


ஜூனியர் விகடன் இதழுக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் வக்கீல் அசன் முகமது ஜின்னா, ஜூனியர் விகடன் ஆசிரியர், பதிப்பாளர், அச்சிட்டாளர், நிருபர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில் தெரிவித்திருப்பதாவது:
14&8&2011 அன்றைய ஜூனியர் விகடனில், �ஸ்டாலின் பெயரைச் சொல்லி நடந்ததா ஷேர் மோசடி” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்த செய்தியில், �அனந்தகிருஷ்ணன் என்பவருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அனந்தகிருஷ்ணன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும்” எம்.கே. சிவராமன் பேட்டியில் தெரிவித் திருப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.
வேண்டுமென்றே அபாண்டமான பொய் குற்றச்சாட்டை எம்.கே.சிவராமன் சுமத்தியிருக்கிறார். உண்மையை ஆராய்ந்து பார்க்காமல், ஜூனியர் விகடன் அந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது. விற்பனை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி செய்தி போடப்பட்டிருக்கிறது.
மு.க.ஸ்டாலின் தற்போது கொளத்தூர் எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த செய்தியை பார்த்ததும் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு, செய்தி உண்மையா என்று கேட்டுள்ளனர்.
இது அவருக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவமானத்தை உண்டாக்கி விட்டது. மேலும் அந்த செய்தியில் மு.க.ஸ்டாலின் படமும் பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட ஒருவரின் வாழ்வுரிமையை மீறி அவரது அனுமதி இல்லாமல் இந்த செய்தி போடப்பட்டிருக்கிறது. வேண்டுமேன்றே உள்நோக்கத்தோடு பொய் குற்றச்சாட்டுடன் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனால், எம்.கே.சிவரமான் இந்த வக்கீல் நோட்டீஸ் கிடைத்த 3 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதுபோல ஜூனியர் விகடன் தனது அடுத்த இதழில் இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு செய்தி வெளியிட வேண்டும். மேலும் வருங்காலத்தில் பத்திரிகை தர்மத்தை மீறி இதுபோன்ற செய்திகளை வெளியிடக் கூடாது. அப்படி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு வக்கீல் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment