பொய்வழக்கு போட்டு முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட திமுகவினரை கைது செய்ததுதான் அதிமுக அரசின் 100 நாள் சாதனை என்று திருச்சியில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.
திருச்சி மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்ஸார் கோபி, அட்டாக் பாண்டி ஆகியோரை சந்திக்க மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, நெப்போலியன் ஆகியோர் 24.08.2011 அன்று திருச்சி வந்தனர். அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்ஸார் கோபி ஆகியோரை மட்டும் சந்தித்து பேச முடிந்தது. அட்டாக் பாண்டி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே சந்திக்க முடியும் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, நெப்போலியன் ஆகியோர் 25.08.2011 அன்று காலை மீண்டும் திருச்சி வந்து மத்திய சிறையில் உள்ள அட்டாக் பாண்டியை சந்தித்து பேசினர். அவருடன் சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ மூர்த்தியும் வந்தார். காலை 10.40க்கு சிறையில் இருந்து வெளியே வந்தனர்.
சிறை வாசலில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறியது:
முன்னாள் அமைச்சர் நேரு இன்று கைது செய்யப்பட்டுள்ளது ஜெயலலிதா அரசின் 100 நாள் சாதனைகளில் ஒன்று. அதிமுக ஆட்சியில் திமுகவினர் பழிவாங்கப்படுகிறார்கள். கார்ப்பரேஷன் வண்டியில் நாய் பிடிப்பதைபோல் நினைத்தபடி கைது செய்கிறார்கள். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆட்சியாளர்களை மட்டும் அல்லாமல், பொய்வழக்கு போட்டு கைது செய்யும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.
No comments:
Post a Comment