ஒரே பகுதியில் அமரும் வகையில் பேரவையில் இருக்கைகள் ஒதுக்காததால் பட்ஜெட் விவாதத்தில் திமுக 09.08.2011 அன்று 2வது நாளாக பங்கேற்காமல் புறக்கணித்தது.
தமிழக அரசின் 2011&2012ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் கடந்த 4ம் தேதி பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய தினம் பங்கேற்ற திமுக உறுப்பினர்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் தங்களது எதிர்ப்பதை தெரிவித்து, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், சட்டமன்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், �சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே பகுதியில் அமரும் வகையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டால் மட்டுமே பேரவை நடவடிக்கையில் கலந்து கொள்வோம்� என்றார்.
பேரவையின் விதி மற்றும் மரபுபடிதான் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என்று பேரவைத் தலைவர் டி.ஜெயகுமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பேரவையில் 08.08.2011 அன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கியது. 09.08.2011 அன்று 2வது நாளாக விவாதம் நடந்தது.
இந்த 2 நாட்களும் திமுகவினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment