கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 29, 2011

தோல்வியால் திமுக துவண்டு விடாது விரைவில் வீறு கொண்டு எழும் : மு.க.ஸ்டாலின் பேச்சு�ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திமுக� என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை ஆர்கே நகர் பகுதி திமுக சார்பில் ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும் விழா, புதுவண்ணாரப் பேட்டையில் 28.08.2011 அன்று நடந்தது.
பகுதி செயலாளர் டன்லப் ரவி தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ பி.கே. சேகர்பாபு முன்னிலை விகித்தார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, 2,100 முஸ்லிம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஸ்டாலின் பேசியதாவது:

ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கக் கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சியின் தலைவர் ஆர்.கே நகர் பகுதிக் கழக செயலாளர் டன்லப் ரவி அவர்களே, இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முழு காரணமாய் அமைந்து முன்னின்று நடத்துவது மட்டுமல்ல இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு முன்னிலை பொறுப்பு ஏற்றிருக்கிற சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என் அன்பிற்கினிய சகோதரர் சேகர்பாபு அவர்களே, இந்த சிறப்பான நிகழ்ச்சியிலே எழுச்சிஉரை ஆற்றி அமர்ந்திருக்கிற பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் அப்துல் காதர் அவர்களே, தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் அவர்களே, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தி.மு.க அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களே, வணக்கத்திற்குரிய சென்னை மாநகர மேயர் அருமை நண்பர் மா. சுப்பிரமணியம் அவர்களே, வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் அவர்களே, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மதிவாணன் அவர்களே, செங்கை சிவம் அவர்களே, தலைமை நிலைய வழக்கறிஞர் அருமை நண்பர் கிரிராஜன் அவர்களே, மாவட்டக் கழக நிர்வாகிகளே, பகுதிக் கழக செயலாளர்களே, வட்டக் கழக செயலாளர்களே, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களே, பல்வேறு அமைப்புகளை சார்ந்திருக்கிற நண்பர்களே, நலத் திட்ட உதவிகளை பெறுவதற்காக வருகை தந்துள்ள பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளை பாராட்டுகளை அதே நேரத்தில் நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். புனித ரமலான் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய இசுலாமிய பெருமக்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய சிறப்பான நிகழ்ச்சியை நம்முடைய அன்புக்குரிய சகோதரர் சேகர்பாபு அவர்கள் ஏற்பாடு செய்து இதை எழுச்சியோடு ஏற்றத்தோடு நடத்திக் கொண்டிருக்கிறார். நான் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து மேடையிலே வந்து அமர்ந்து எதிரில் அமர்ந்துள்ள உங்களை எல்லாம் பார்த்த போது எனக்கு என்ன எண்ணம் ஏற்ப்பட்டது என்று சொன்னால் எண்ணம் என்பதை விட என்ன சந்தேகம் ஏற்பட்டது என்று கேட்டால் இது என்ன அரசு நிகழ்ச்சியா என எனக்குள்ளே ஒரு சந்தேகம் ஏற்பட்டது. காரணம் இது போன்ற நிகழ்சிகள் கடந்த தி.மு.க ஆட்சியிலே நாள்தோறும் நடந்தது. அப்படி நடைபெற்ற போது அதிகமான நிகழ்சிகளில் பங்கேற்றவன் யார் என்று கேட்டால் அடியேன் தான் அதிகமான நிகழ்சிகளில் பங்கேற்றவன்.அதனால் தான் சேகர்பாபு அவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து என்னை அழைத்து அரசாங்கம் இருந்தால் மட்டுமல்ல அரசாங்கம் இல்லாவிட்டாலும் இது போன்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவேன் என்று இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்து என்னை அழைத்திருக்கிறார். சேகர்பாபு அவர்களைப் பற்றி எனக்கு முன்னால் உரையாற்றிய பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டு சொன்னார்கள். அதே போல மற்றவர்களும் அவருடைய சிறப்பை அவரது செயல்பாட்டை இங்கே பெருமைப் படுத்தி எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். நேற்று முன்தினம் நான் திருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும் சென்றிருந்தேன். எதற்கு என்று கேட்டால் திருச்சி சிறையிலிருக்கிற முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கழகத் தோழர்களை சந்திக்க திருச்சிக்கும், மாலையிலே புதுக்கோட்டையிலே நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கும் சென்றிருந்தேன். அப்படி சென்றிருந்த போது நம்முடைய சேகர்பாபு அவர்களை நான் அழைத்து சென்றிருந்தேன். சிறையிலிருக்கிற தோழர்களை அதிலும் குறிப்பாக அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை சந்திக்க இருக்கிறேன் என்று சொன்ன போது அவரும் வரக் கூடிய அந்த ஆர்வத்தை சொன்ன போது நான் போகிறேன் என்னோடு வாருங்கள் என்று சொல்லி அழைத்து சென்றேன். அப்படி அழைத்து சென்ற போது இடையிடையில் காரிலே போகிற போது அறையிலே தங்கியருந்த போது அதற்கு பிறகு மாலையிலே திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு காரிலே போகிற போது இடையிலே வரவேற்பு நிகழ்சிகளை முடித்துக் கொண்டு புதுக்கோட்டை போய் சேர இரண்டு மணி நேரம் ஆனது. அங்கு கூட்டத்தை முடித்து மீண்டும் திருச்சிக்கு விமானத்தை பிடிக்க காரிலே வந்து சேர இரண்டு மணி நேரம் பிடித்தது. எதற்கு இதை சொல்கிறேன் என்று சொன்னால் போகிற போதும் சரி வருகிற போதும் சரி காரிலே நான் முன் சீட்டில் அமர்ந்திருந்தேன். அவர் பின் சீட்டில் அமர்ந்திருந்தார். அவர் கையிலே செல்போனை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருந்தார். இப்போது தான் எனக்கு புரிகிறது அவர் மெதுவாக பேசியதை நான் உணர்ந்தேன். இந்த நிகழ்ச்சி பற்றி எல்லோரோடும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் என்பது இங்கு வந்த பிறகு நன்றாக தெரிந்திருக்கிறது. எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால் எதோ நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று சொல்லி விட்டு அப்படியே ஒதுங்கி விடுவார்கள். ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம் என்று சொன்னால் அது எந்த அளவு வெற்றி பெற வேண்டும் என்று தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு பணியாற்றுவதிலே கடமையை நிறைவேற்றி தருவதிலே அதற்கு நிகர் யாரென்று கேட்டால் அது நம்முடைய சேகர்பாபு என்பதை நான் பெருமையோடு குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன்.

ஆட்சியில் திமுக இல்லாவிட்டாலும் மக்கள் பயன்பெறும் இதுபோன்ற விழாக்கள் நடக்கிறது.
சில அரசியல்வாதிகள் தேர்தல் வந்தால்தான் மக்களை சந்தித்து ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவார்கள்.
ஆனால் தேர்தல் வந்தாலும் வராவிட்டாலும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக, அதுவும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திமுக. தேர்தல் தோல்வியால் துவண்டு விடாது; மீண்டும் வீறு கொண்டு எழும்.
அண்ணா இஸ்லாமை பற்றி குறிப்பிடும்போது, இது மதமல்ல; மார்க்கம் என்றார். ஒரு லட்சியத்தை அடைய, சிறப்பான வழியை தேட இது உதவும் என்றார். நாட்டில் பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டு. நான், முதல்வர் ஜெயலலிதாவை கூறவில்லை. அவர் பெண்களில் ஒரு விதிவிலக்கு.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய லீக் பொதுச் செயலாளர் அப்துல் காதர், மேயர் மா. சுப்பிரமணியன், எஸ்.பி. சற்குணபாண்டியன். டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, ஆர்.டி.சேகர், செங்கை சிவம், இரா.மதிவாணன், கட்பீஸ் பழனி, கிரிராஜன், இளைய அருணா, மணிவேலன், ஏ.டி.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment