கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, August 30, 2011

தூக்கு தண்டனையை நிறுத்த ஜனாதிபதிக்கு ஜெயலலிதா பரிந்துரை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின் பேச்சு


பேரறிவாளன் உள்பட மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்த தனக்கு அதிகாரம் இல்லையென்று கூறும் முதல்வர் ஜெயலலிதா, ஜனாதிபதிக்கு பரிந்துரையாவது செய்யலாமே என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
திண்டுக்கல்லில் மாவட்ட திமுக சார்பில் �சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு� என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் 29.08.2011 அன்று இரவு நடந்தது. மாவட்ட செயலாளர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் முருகேசன், இளைஞரணி அமைப்பாளர் அசன்முகமது, துணை அமைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அர.சக்கரபாணி எம்எல்ஏ., வரவேற்றார்.
கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இல்லாவிடினும், மக்கள் மன்றத்தில் திமுகதான் ஆளும்கட்சி. சட்டமன்றத்தில் ஜனநாயகமே இல்லை.
பேரறிவாளன் உள்பட மூன்று பேருக்கு தூக்குதண்டனையை நிறுத்தி வைப்பது குறித்த கருத்துக்களைக்கூட சட்டப்பேரவையில் சொல்ல முடியவில்லை. திமுக மட்டுமல்லாது அதிமுக கூட்டணி கட்சிகள், பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், திரையுலகினர் அனைவரும் தூக்குதண்டனையை நிறுத்தி வைக்க குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, தனக்கு அதிகாரம் இல்லை என்கிறார். ஜனாதிபதிக்கு குறைந்தபட்சம் பரிந்துரையாவது செய்யலாமே. தமிழ்மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கலாமே. வேறொரு நாடான இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அப்போது மட்டும் எங்கே இருந்து இவருக்கு அதிகாரம் கிடைத்தது. இதனை அரசியல் ஆக்காமல் உணர்வு ரீதியாக இப்பிரச்னையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
திமுக கொண்டு வந்த சமச்சீர் கல்வித்திட்டம் தரமானதே என உச்சநீதிமன்றமே தீர்ப்பு கூறியுள்ளது. இதே போன்று தலைமைச்செயலக விவகாரத்திலும், நீதிமன்றத்தில் நாம் வெற்றிபெறுவோம். தலைமை செயலக கட்டுமான பணியில் தரமில்லை என்று கூறி மூடிவிட்டு பழைய கட்டிடத்திலேயே
தரமில்லாத புதிய தலைமை செயலக கட்டிடத்தில் எப்படி தரமான மருத்துவமனையை அமைக்க முடியும். இதுதவிர, தலைமை செயலகம் செயல்படுவதற்கேற்பவே அக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டது. மருத்துவமனைக்கான உள்கட்டமைப்புகளை கொண்டுவருவதற்கு மேலும் ரூ.2ஆயிரம் கோடி செலவாகும்.
இதனால் மக்கள் பணம் தான் விரயமாகும். 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயுள்ளனர். திமுக என்றும் அழியாது.
நிலம் அபகரிப்பு தொடர்பாக குற்றம் நடந்திருந்தால், முறையாக வழக்குப்பதிவுசெய்து நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்க வேண்டும். அதைவிடுத்து, பொய்ப்புகார் மூலம் கைது செய்தால் அதனைக்கண்டு திமுக அஞ்சாது. இதைவிட பல்வேறு சோதனைகள், தோல்விகளை கடந்துள்ளோம். ஜெயலலிதாவின் இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சுப.தங்கவேலன், தங்கம்தென்னரசு, செங்குட்டுவன், வேலு, மொய்தீன்கான், கம்பம் ராமகிருஷ்ணன், கோவி.செழியன், பெரியகருப்பன், புஷ்பலீலா ஆல்பன் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment