வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த 3 மனுக்களை பெங்களூர் தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 1991 முதல் 96ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ஸி66கோடிக்கு சொத்துகள் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இதில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. சாட்சி விசாரணை முடிந்து விட்டதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உட்பட அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா கடந்த மாதம் உத்தரவிட்டார்.
ஆனால், இதில் இருந்து விலக்கு அளிக்கும்படி ஜெயலலிதா 2 மனுக்கள் தாக்கல் செய்தார். �தற்போது தமிழக முதல்வராக இருப்பதாலும், இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பதாலும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்� என்று ஒரு மனுவில் கோரப்பட்டது. �நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால், வீடியோ கான்பரன்சிங் மூலம் பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும்� என்று மற்றொரு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கக் கூடாது என்று அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், வக்கீல்கள் வாதம் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் 12.08.2011 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், ஜெயலலிதாவின் 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். உடனே, ஜெயலலிதாவின் வக்கீல் குமார் புதிதாக தாக்கல் செய்த மனுவில், �தமிழகத்தில் அடுத்த மாதம் 14ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கிறது. அதற்குள் ஜெயலலிதாவை நேரில் ஆஜராகும்படி உத்தரவிடக் கூடாது� என்று கோரினார்.
அதற்கு பதில் அளித்த நீதிபதி, �அவரை எப்போது அழைக்க வேண்டும் என்பது நீதிமன்றத்துக்கு தெரியும்� என்று கூறி அந்த மனுவையும் தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி தரப்பு வக்கீல்கள் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், �சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடுவிடம் மறுவிசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்� என்று கோரினர். இந்த மனுவை 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment