கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 11, 2011

சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதம் : திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை


பேரவையில் 08.08.2011 அன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதில், திமுக எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஒரே வரிசையில் இடம் ஒதுக்கும் வரை கூட்டத் தொடரை புறக்கணிக்க திமுக உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அன்று காலை 10.30 மணிக்கு 2011&2012ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, தங்களுக்கு ஒரே வரிசையில் இடம் அளிக்காததை கண்டித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது:
கடந்த கூட்டத்தொடரின் போதே சபையில் திமுக உறுப்பினர்களுக்கு ஒரே பகுதியில் இடம் ஒதுக்க கோரிக்கை வைத்தோம். பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்படும் என சபாநாயகர் டி.ஜெயக்குமார் வாய்மொழியாக உறுதி அளித்திருந்தார். ஆனால், இப்போது அதை செய்யவில்லை. திமுக உறுப்பினர்களுக்கு ஒரே பகுதியில் இடம் ஒதுக்கவில்லை.
இதை கண்டித்து பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம். எங்களுக்கு ஒரே பகுதியில் இடம் ஒதுக்கும் வரை சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்’� என கூறினார்.
பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திலும் திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதுகுறித்து சபாநாயகர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, �ஏற்கனவே உள்ள சட்டப்பேரவை விதிகளின்படியும், ஜனநாயக மரபுப்படியும்தான் உறுப்பினர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன� என்றார்.
இந்நிலையில், 3 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை 08.08.2011 அன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது. பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், திமுக உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் ஆளுங்கட்சி கூட்டணியை சார்ந்த எம்எல்ஏக்கள் மட்டும் இருந்ததால் முதல்வர் பற்றி புகழ் பாடுவதிலேயே அதிக நேரத்தை எம்எல்ஏக்கள் செலவிட்டனர். இதனால், கூட்டம் எந்தவித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக நடந்தது.
திமுக உறுப்பினர்களுக்கு ஒரே பகுதியில் இடம் ஒதுக்கப்படாவிட்டால் இந்த கூட்டத் தொடர் முழுவதையும் அவர்கள் புறக்கணிப்பாளர்கள் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment