கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

மதுரை மாநகராட்சி மண்டல தலைவர் கைது


மதுரையில் மாநகராட்சிக்கு சொந்தமான 3இடங்களில் மீன்கடைகள் நடத்தி வந்த வியாபாரியிடம் மாதம்தோறும் கடைக்கு தலா 5ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டதாக மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்துவை நேற்று போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மதுரை புதூரைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து(52). மதுரை மாநகராட்சி வடக்குமண்டல தலைவர். மாநகர் மாவட்ட திமுக அவைத்தலைவராகவும் உள்ளார். மதுரை தெற்குவாசல் ஜின்னா வீதியைச் சேர்ந்தவர் ஹக்கீம்தீன்(36). இவர் புதூர் மாதாகோயில் தெரு, இந்தியன் பேங்க் காலனி மற்றும் டிஆர்ஓ காலனி ஆகிய பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான 3இடங்களில் மீன் கடைகள் வைத்துள்ளார். இவர், மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கி முத்து மீது போலீசில் அளித்துள்ள புகாரில்,
‘எனது ஒவ்வொரு மீன் கடைக்கும் மாதம்தோறும் இசக்கிமுத்து 5ஆயிரம் ரூபாய் மாமூல் செலுத்தும்படி கேட்டார். முதல் தவணையாக ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தேன். அதற்கடுத்து எந்த பணமும் கொடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு 3இடங்களிலும் செயல்பட்டு வந்த எனது மீன் கடைகளை இடித்து அகற்ற செய்தார். இதுகுறித்து கேட்ட என்னை அடியாட்களுடன் வந்து, ஆயுதங்களைக் காட்டி, வெட்டிக் கொலை செய்வதாக மிரட்டினார்’ என தெரிவித்திருந்தார். இதன்பேரில் மதுரை தெற்குவாசல் போலீசார் இசக்கி முத்து மற்றும் 6பேர் மீது 16 .08 .2011 அன்று வழக்குப்பதிவு செய்து, இசக்கிமுத்துவை கைது செய்தனர்.
இவர் மீது 147(நான்குபேருக்கு மேல் கூடுவது), 148(சட்டவிரோதமாக கூடுதல்), 341(பணியைத் தடுத்தல்), 323(லேசான காயம் ஏற்படுத்துதல்), 307(கொலை முயற்சி), 506(2)(ஆயுதங்களைக் காட்டி கொலை மிரட்டல்) ஆகிய 6பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஜேஎம்6 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இசக்கிமுத்துவை ஆக.30ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சுஜாதா உத்தரவிட்டார். இதன்பேரில் இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment