கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 22, 2011

தோல்வியால் துவண்டுவிடக்கூடாது: நெப்போலியன்


பாளை தொகுதி எம்.எல்.ஏ மைதீன்கான் சார்பில் ரமலான் இப்தார் மற்றும் மத நல்லிணக்க விழா 21.08.2011 அன்று கொக்கிரகுளத்தில் நடந்தது. நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் துவக்கி வைத்தார். எம்.பி. ராமசுப்பு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தர்ராஜபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ ராமசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மத்திய அமைச்சர் நெப்போலியன் பேசியதாவது:

உலகம் முழுவதும் உள்ள மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இஸ்லாமிய சமுதாயத்தினர் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

மலான் மாதம் இஸ்லாமியர்களுக்கு முக்கியமான மாதமாகும். இம்மாதத்தில் இஸ்லாமியர்கள் சூரிய உதயத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். பசி என்றால் என்ன என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் இஸ்லாமியர்கள் நோன்பு இருக்கின்றனர். வறுமையின் கொடுமையை அப்போதுதான் நாம் உணரமுடியும். திரைப்பட துறை யில் துவங்கி நான் நெல்லை சீமையில் மக்களோடு மக்க ளாக வாழ்ந்து வருகிறேன். தோல்வி என்பது நிரந்தரமல்ல.

திமுக தோல்விகளை கண்டு அஞ்சாத இயக்கம். தோல்வி என்பது சரித்திரம் இல்லை என்பதற்கு நான் ஒருவனே உதாரணம். மயிலாப்பூர் சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். அடுத்து இந்தியாவிலேயே மிகப்பெரிய பதவில் நான் அமர்ந்திருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் தோல்விக்கு பின்னால் மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்பதற்கு நான் தான் உதாரணம். தோல்வி அடைந்தவுடன் உடனே துவண்டுவிடக்கூடாது. அதற்கு அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை பார்க்க வேண்டும்.


எந்த அலையிலும் திமுக என்ற படகு கவிழ்ந்து விடாது. கண்டிப்பாக கரைசேரும். மீண்டும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும். அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபையில் எதிர்கட்சியினரை பேச அனுமதிப்பதில்லை. அந்த அளவிற்கு அராஜகம் நடக்கிறது. தி.மு.க.வினர் துவண்டு விடாமல் உழைக்கவேண்டும் என்றார்.
எம்.பி.தங்கவேலு, முன் னாள் எம்.எல்.ஏ.மாலை ராஜா, மேயர் சுப்பிரமணியன், செங்கோல் ஆதீன கர்த்தா கல்யாண சுந்தர சத்தியஞான பண்டார சந்நிதி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தலைவர் பத்ஹூர் ரப்பானி, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைவர் துராப்ஷா, பங்குதந்தை அந் தோணி குரூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment