கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

சட்டப்பேரவை தொடர் முழுவதும் திமுக புறக்கணிக்க முடிவு





திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் 16 .08 .2011 அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி, பொதுசெயலாளர் அன்பழகன், பொருளாளரும், சட்ட மன்ற கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன் உட்பட திமுக எல்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
திமுக சார்பில் கடந்த பொது தேர்தலில் 23 எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், பேரவை யில் திமுக உறுப்பினர்களுக்கு ஒரே பகுதியில் இடம் ஒதுக்காமல் வெவ்வேறு பகுதிகளில் இடம் ஒதுக்கியதால், ஒரே பகுதியில் இடம் ஒதுக்குமாறு மு.க.ஸ்டாலின் பேரவை தலைவருக்கு கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி கடிதம் எழுதி கேட்டுக் கொண்டார்.
திமுக ஆட்சியில் தேமுதிக சார்பில் ஒருவர் உறுப்பினர் வெற்றிப் பெற்ற போதிலும், முன்வரிசையில் இடம் ஒதுக்கி தரப்பட்டது. மற்ற கட்சி உறுப்பினர்களுக்கும் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள் என்று பாராமல், அந்த கட்சி தலைவருக்கு முன் வரிசையிலும், அவருக்கு பக்கத்தில் உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரே பகுதியில் இடம் ஒதுக்கி தராததால், அவ்வாறு ஒதுக்கி தரும் வரையில் அவையில் பங்கேற்பதில்லை என்று நிதிநிலை அறிக்கை, பொது விவாதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தோம்.
தொகுதி பிரச்னையை எடுத்துரைக்கவும், மக்கள் ஆற்றும் கடமையை ஆற்றவும், மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொள்வது என முடிவு செய்து அது கடந்த 13ம் தேதியில் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதற்கும் பதில் கிடைக்காத நிலையில் இன்று(நேற்று) பேரவை நடவடிக்கையில் கலந்து கொண்டோம். கேள்வி நேரத்தில், யார் மீதும் குற்றம் சாட்டக் கூடாது என்று மரபிற்கு மாறாக திமுக மீதும், திமுக ஆட்சி மீதும் கேள்வி நேரத்தில் தாக்கி பேசினார்கள். எப்படியாவது திமுக உறுப்பினர்களை வெளியேற்றுவதிலேயே அக்கறை காட்டினார்கள். இல்லாத, பொல்லாத பழிகளை சுமத்தினார்கள்.
துரைமுருகன் எதுவும் பேசாமல் கையை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த நிலையில், அவர் ஜாடைகாட்டி கிண்டல் செய்ததாக ஒரு அமைச்சர் தவறான தகவலை தெரிவித்தார். அதை மறுக்க முயற்சித்த துரைமுருகனுக்கு வாய்ப்பு தரவில்லை. இதனால், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் இந்த சட்டமன்ற தொடரில் மேலும் கலந்து கொள்வது சரியாக இருக்காது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. பேரவையில் நடந்த விவாதங்களையொட்டி பொதுமக்களுக்கு அனைத்தும் விளக்கும் வகையில் வரும் 25ம் தேதி சென்னையில் ‘சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடத்துவது என்றும், அதில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொள்வது என்றும் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே தலைப்பில் பொது கூட்டங்களை ஏற்பாடு செய்து திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு உரையாற்றுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment