கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

நில அபகரிப்பு விவகாரம் : காந்தி அழகிரி மீதான புகார் மனு வாபஸ்


காந்தி அழகிரி மீது நில அபகரிப்பு புகார் செய்தவர், அந்த புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாக எஸ்.பி.யிடம் மற்றொரு மனு வழங்கியுள்ளார்.
மதுரை விக்கிரமங்கலத்தை சேர்ந்தவர் பாண்டி(65). இவர் எஸ்.பி. அஸ்ரா கார்க்கிடம் ஒரு புகார் மனு வழங்கினார். அதில் கூறியுள்ளதாவது:
எனக்கு சொந்தமாக விக்கிரமங்கலம் கிராமத்தில் 3 ஏக்கர் 11 சென்டில் தென்னந்தோப்பும், நிலமும் இருந்தது. கடந்த 4.5.2008 அன்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரியின் பெயருக்கு 3 ஏக்கர் 11 சென்டுக்கு 20 லட்சத்து 99,250 ரூபாய்க்கு கிரயத் தொகையை ரொக்கமாக பெற்றுக் கொண்டு, பத்திரம் பதிந்து கொடுத்துள்ளேன்.
கடந்த 1.8.2011 அன்று காந்தி அழகிரி மீது நிலம் மோசடி செய்ததாக புகார் மனு கொடுத்துள்ளேன். எனது மனைவி மற்றும் பிள்ளைகள் ஏன் அவ்வாறு புகார் கொடுத்தீர்கள்? மார்க்கெட் விலைக்குத்தான் விற்பனை செய்துள்ளீர்கள். ஊரில் உள்ள சில அரசியல்வாதிகள் உள்நோக்கத்தோடு கூறியதன்பேரில் புகார் கொடுத்து விட்டேன். மற்றபடி காந்தி அழகிரி என்னிடம், என் மகன் ஜோதிக்கு வேலை வாங்கித் தருவதாக எந்தவித வாக்குறுதியும் கொடுக்கவில்லை. ஏற்கனவே கொடுத்துள்ள புகார் மனுவை நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment