திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தின விழா 15 .08 .2011 அன்று கொண்டாடப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 .08 .2011 அன்று காலை 8 மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. திமுக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி, அண்ணா அறிவாலயம் முன்பு இருந்த கம்பத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அனைவரும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முத்து ராமலிங்கம், கா.ராமச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் ஆ.டி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உசேன், சங்கரி நாராயணன், பி.கே.சேகர்பாபு, வக்கீல்கள் ஆர்.எஸ்.பாரதி, கிரிராஜன், ஆறுமுகம், ரவிச்சந்திரன், பரந்தாமன், ரவி, தேவகுமார், நன்மாறன், விஜயாதாயன்பன், தொண்டரணி மாசிலாமணி, பகுதி செயலாளர்கள், மா.பா.அன்புதுரை, ஏகப்பன், கொளத்தூர் ஐ.சி.எஸ்.முரளி, இளைஞரணி வி.எஸ்.ராஜ், உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி.,
மாநில முதல்வர்களுக்கு தேசிய கொடி ஏற்றும் உரிமை பெற்று தந்தது கருணாநிதிதான். திமுக உள்ளாட்சி தலைவர்கள் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுவார்கள். அந்த அடிப்படையில் தேசியக் கொடி ஏற்றினோம். மரபுப்படி காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தோம். ஜெயலலிதாவுக்கு மக்கள் பற்றியோ, நாடு பற்றியோ, சமூகம் பற்றியோ கவலை இல்லை. தனது சொந்த நலன் தான் முக்கியம்.
கே: ஊழல் காரணமாக தேசிய அரசியலில் இருந்து தி.மு.க. தனிமை படுத்தபட்டுள்ளதா?
ப: தேசிய அரசியலில் இருந்து தி.மு.க.வை யாரும் தனிமைபடுத்த முடியாது.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
கே: ஊழல் காரணமாக தேசிய அரசியலில் இருந்து தி.மு.க. தனிமை படுத்தபட்டுள்ளதா?
ப: தேசிய அரசியலில் இருந்து தி.மு.க.வை யாரும் தனிமைபடுத்த முடியாது.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
No comments:
Post a Comment