கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

17ம் தேதி 77வது பிறந்த நாள் : முரசொலி மாறன் சிலைக்கு கருணாநிதி மாலை அணிவிக்கிறார்


மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு, வரும் 17ம் தேதி 77வது பிறந்த நாள். இதையொட்டி அவரது சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மாலை அணிவிக்கிறார்.
இதுகுறித்து, தென்சென்னை திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், வடசென்னை திமுக மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் 13 .08 .2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் கருணாநிதியின் மனச்சாட்சியாக விளங்கி, திமுகவின் மூளையாக செயல்பட்டு, மத்திய அமைச்சராக அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்று மிகச் சிறப்பாக பணியாற்றியவர் மறைந்த முரசொலி மாறன். அவரது 77வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 17ம் தேதி காலை 9 மணிக்கு கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் திருவுருவச் சிலைக்கு தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணியினர் மலர் மாலை அணிவிக்கின்றனர்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள், திமுக செயலாளர்கள், வடசென்னை, தென்சென்னையைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு திமுக அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ளு மாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment