கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 19, 2011

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய சமுதாயத்திற்காக திமுக என்றும் பாடுபடும் - மு.க.ஸ்டாலின்


ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய சமுதாயத்திற்காக திமுக பாடுபடும் என்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் 18 .08 .2011 அன்று நடைபெற்றது. முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் துணை முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:
நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு நான் தொடர்ந்து வருவது பற்றி இங்கே கூறினார்கள். நம் உணர்வில் என்றும் மாற்றம் இல்லை என்பதை எடுத்துக்காட்டவே இதை குறிப்பிடுகிறேன். நம் உறவு நட்புறவோடு, சகோதர பாசத்தோடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நபிகள் நாயகம் சோதனை, வேதனைகளை தாங்கி சிந்தனைகளை செயல்படுத்தினார். அதுபோல திமுக எந்த சோதனை, வேதனை வந்தாலும் அதை சவாலாக எண்ணி மக்கள் நலனுக்காக தமது கடைமையை நிறைவேற்றி வருகிறது. இதை யாரும் மறுக்க முடியாது. திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கும் இடையே நட்புறவு என்றும் நீடிக்கும். நோன்பு நேரத்தில் மட்டும் உங்களை சந்திக்க வருபவர்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் உங்களோடு இருப்பவர்கள். நீங்கள் எங்களோடு இருப்பவர்கள்.
ஆண்களுக்குரிய உரிமைகள் பெண்களுக்கும் வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதன்படி பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வேண்டும் என்று 1929ம் ஆண்டு தீர்மானமாக நிறைவேற்றினர். அதனை 60 ஆண்டுகள் கழித்து கருணாநிதி நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திகழ்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், பேராயர் எஸ்றா சற்குணம், திருப்பூர் அல்தாப், அபுபக்கர் ஆகியோர் பேசினர்.

No comments:

Post a Comment