கரூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் 19.08.2011 அன்று தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஈரோடு முத்துசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தினார். அந்த திட்டங்களை மக்களுக்கு சரியாக கொண்டு போய் சேர்க்கவில்லை.
அதே போன்று கலைஞர் மின்சாரத்திற்காக பல திட்டங்களை தீட்டினார். அந்த திட்டங்கள் முடிந்தால் தேவைக்கு அதிகமாக மின்சாரம் இருக்கும். அடுத்த ஜுன் மாதம் தமிழகத்தில் மின்சார வெட்டு இருக்காது என்று எப்படி சொல்கிறார்கள் என்றால், கலைஞர் தொடர்ந்த திட்டம் தான் காரணம்.
கடந்த ஆட்சியில் அதிக தொழிற்சாலை தொடங்கியதால், மின்சார பற்றாக்குறை ஏற்பட்டது. அதே போன்று 2 ஜி பிரச்சினை குறித்து மக்களிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள்.
அதே போன்று பொது பிரச்சினை என்று வந்தால், அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையில் நாம் ஒன்றாக இருந்திருந்தால் நடந்து இருக்கும். ஆனால் இதில் மாறுபட்ட கருத்து இருப்பது வருத்தம் அளிக்கிறது.
தி.மு.க. எந்த காலத்திலும் சோர்ந்து போகாது என்பதை நான் 'அங்கிருந்து' (அதிமுக) பார்த்து இருக்கிறேன். தி.மு.க.கட்சிக்கு ஆயுள் கூடிக்கொண்டே போகிறது. இந்த 5 ஆண்டு போகட்டும். அதன்பிறகு 50 ஆண்டு காலத்திற்கு தி.மு.க.வை அழிக்க ஆள் இல்லை என்றார்.
No comments:
Post a Comment