அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏவை போலீஸ் காவ லில் வைத்து விசாரிக்க கோரி போலீசார் தாக்கல் செய்த 3 மனுக்களை திருச்செந்தூர் கோர்ட் 22.08.2011 அன்று தள்ளுபடி செய்தது.
திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் அனிதா ராதாகிருஷ் ணன். ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷை கொல்ல முயன்றது, டாஸ் மாக் பாரில் வெடிகுண்டு வீசத்தூண்டியது, திமுக அலுவலகத்தை தீ வைக்க தூண்டியது ஆகிய 3 வழக்குகளிலும் அனிதா ராதாகிருஷ்ணனை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்த னர். இந்த 3 வழக்குகளிலும் அவரிடம் 3 நாள் விசா ரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆறுமுகநேரி போலீசார் திருச்செந் தூர் மாவட்ட முதன்மை உரிமையியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
22.08.2011 அன்று இந்த வழக்கு மாஜிஸ்திரேட் ப்ரிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பகல் 12.20 மணிக்கு அனிதாராதாகிருஷ்ணன் கோர்ட்டில் ஆஜரானார். இதில் அரசு மற்றும் அனிதா தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் நடந்தது. இதையடுத்து போலீசார் காவலில் வைத்து விசாரிக்க கோரி தாக்கல் செய்த 3 மனுக்களையும் மாஜிஸ்திரேட் ப்ரிதா தள்ளுபடி செய்தார்.
பாரில் வெடிகுண்டு வீச தூண்டியது மற்றும் தீ வைக்க தூண்டிய வழக்குக ளில் 20ம் தேதி தான் அனிதா ராதாகிருஷ்ணன் ரிமாண்ட் செய்யப்பட்டுள் ளார். ஆனால், அவரை விசாரிக்க கோரி 16ம் தேதியே போலீசார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 16ம் தேதி கோர்ட்டுக்கே வராத அவரிடம் எப்படி விசாரணை நடத்த அனுமதிக்க முடியும் என்று கூறி அந்த மனுக்களை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். கொலை முயற்சி வழக்கில் விசாரிக்க கோருவதற்கு சரியான முகாந்திரத்தை போலீசார் தாக்கல் செய்யவில்லை என்று கூறி அந்த மனுவையும் மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.
சுரேசை கொலை செய்ய தூண்டியதாக போடப்பட்ட வழக்கில் கோர்ட்டில் நாளை (24ம்தேதி) அனதா ராதாகிருஷ்ணன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
அனிதா ராதாகிருஷ் ணன் ஆஜரானதையடுத்து திருச்செந்தூர் கோர்ட் வளாகத்தில் தூத்துக்குடி ஏடிஎஸ்பி சாமிதுரைவேலு, திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
கோர்ட்டு முன்பு மைதீன்கான் எம்எல்ஏ, நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமிபாண்டியன், ஜெயதுரை எம்பி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பா ளர் இசக்கியப்பன், அனிதா சகோதரர் சிவா, சித்திரைநாதன், செங்குழி ரமேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள், வக்கீல்கள் கூடினர்.
இதனால் கோர்ட்டிற்கு செல்லும் வழியை போலீ சார் பேரிகாட் மூலம் தடுத்து வைத்திருந்தனர். போலீசார் அங்கு யாரையும் செல்லவிடவில்லை. வக்கீல் சங்க செயலாளர் முகம்மது உவைஸ் அவ்வழியாக பைக் கில் வந்தபோது போலீசார் அவரை தடுத்தனர். இத னால் வக்கீலுக்கும், போலீசாருக்கும் தகராறு ஏற்பட் டது. வக்கீல்கள் சந்திரசேக ரன், ஜெபராஜ், ஜெயம் ஜூலியஸ், குருராமன், கிருபா உட்பட பல வக்கீல் கள் வந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் வெளி யூரில் இருந்து போலீசார் கைதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந் தனர். அப்போது வக்கீல் கள் நுழைவுவாயிலில் வழிமறித்து போலீசாரை கண் டித்து கோஷமிட்டனர். இதைதொடர்ந்து போலீ சாரே வக்கீல் முகம்மது உவைஸின் பைக்கை கோர்ட் வளாகத்தில் கொண்டு நிறுத்தினர். அதன்பிறகே வக்கீல் கள் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment