மாநில திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, பிரச்சாரக் குழு நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மகளிர் அணி தலைவர் நூர்ஜகான் பேகம் தலைமை தாங்கினார். திமுக துணை பொது செயலாளர் சற்குண பாண்டியன் முன்னிலை வகித்தார். மகளிர் அணி செயலாளர் புதுக்கோட்டை விஜயா வரவேற்றார். மகளிர் அணி துணை தலைவர் விஜயா தாயன்பன், இணை செயலாளர் ராஜம்ஜான், பிரச்சார குழு செயலாளர்கள் பவானி ராஜேந்திரன், சங்கரி நாராயணன், நளினி சாரங்கன் கலந்து கொண்டனர். மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் காரல்மார்க்ஸ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழக மாணவர்கள் 1.25 கோடி பேருக்கு சமச்சீர் கல்வி இந்த ஆண்டே கிடைக்க ஆவன செய்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இந்த கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து தமிழ் பண்பாட்டை நிலை நிறுத்திய திமுக ஆட்சி சட்டத்தை மாற்றி சட்டத் திருத்தம் கொண்டு வந்த ஜெயலலிதா அரசுக்கு கூட்டம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கருணாநிதி அறிவிப்பின்படி தொடர்ந்து கொண்டாடுவோம் என்று கூட்டம் உறுதி எடுக்கிறது.

திமுகவை அச்சுறுத்த பொய் வழக்கு போட்டு பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கும் ஜெயலலிதா அரசை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. ஆசியாவிலேயே மிக சிறந்த பசுமை கட்டிடமான தலைமை செயலக கட்டிடத்தை தரமற்றது என்று பொய் சொல்லி பழைய தலைமை செயலகத்திலேயே ஆட்சி நடத்தும் ஜெயலலிதாவின் போக்கை கூட்டம் கண்டிக்கிறது.
No comments:
Post a Comment