திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் ஜாமீனில் விடுதலை ஆகி வெளியே வந்தபோது மற்றொரு வழக்கில் பாளையங்கோட்டை சிறைவாசலில் வைத்து 03.08.2011 அன்று கைது செய்யப்பட்டார்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 29ல் நடந்த போராட்டத்தில் கொரடாச்சேரி பள்ளி மாணவர்களை சாலை மறியலில் ஈடுபட தூண்டியதாக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் பாலசந்தர், இளைஞ ரணி நிர்வாகிகள் பிரபாகரன், விமல், சுப்பிரமணியன், மகாராஜன், சங்கர் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதை கண்டித்து ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து திருவாரூர் கோர்ட்டில் 7 பேர் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், திருவாரூர் போலீஸ் நிலையத்தில் 7 பேரும் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த ஜாமீன் உத்தரவை பாளை சிறை அதிகாரிகளிடம் கொடுக்க திமுக தரப்பு வக்கீல்கள் நெடுஞ்செழியன், பிரபாகர், துரை உள்பட திருவாரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் 03.07.2011 அன்று அதிகாலை 4 மணியளவில் பாளையங்கோட்டை சிறை முன்பு காத்திருந்தனர்.
இதற்கிடையில் காலை 7 மணியளவில் திருத்துறைப்பூண்டி போலீசார் பாளை சிறைக்கு வந்தனர். அவர்கள் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் அதிமுக வார்டு செயலாளர் ரமேஷ்(37) கொடுத்த புகாரின்பேரில் பூண்டி கலைவாணனை மீண்டும் கைது செய்வதாக கூறி அதற்கான உத்தரவை சிறை அதிகாரிகளிடம் கொடுத்தனர். ஜாமீன் கிடைத்த மகிழ்ச்சியிலிருந்த திமுகவினருக்கு போலீ சாரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கண் இமைக்கும் நேரத்தில் திருத்துறைப்பூண்டி போலீசார் சிறை வாச லில் வைத்து அவரை கைது செய்து கோர்ட்டிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். நெல்லை முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா போலீஸ் அதிகாரிகளுடன் விவரம் கேட்டார். இதனால் மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசை கண்டித்து திமுகவினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து பூண்டி கலைவாணன் கூறுகையில், �திருவாரூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து திமுகவினரை கைது செய்து வருகின்றனர். ஸ்டாலினுடன் நான் இருந்த போது திருத்துறைப்பூண்டிக்கு செல்ல எனக்கு அனுமதி மறுத்த போலீசார் அங்குள்ள கடையை சேதப்படுத்தியதாக கூறி பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். நான் எதற்கும் அஞ்சமாட்டேன்� என்றார்.
No comments:
Post a Comment