கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

மதுரை திமுகவினர் மீது தொடரும் போலீஸ் நடவடிக்கை : குண்டர் சட்டத்தில் ஒச்சுபாலு கைது

மதுரையில் திமுகவினரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. மதுரை திமுக பகுதிச் செயலாளர் ஒச்சுபாலு மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது.
மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் காந்தி. தனியார் வங்கி மீட்பு பிரிவு ஏஜென்ட். கரிமேட்டைச் சேர்ந்த திமுக பகுதிச் செயலாளர் ஒச்சுபாலு(50). 2010ஜன.21ல் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பிறந்தநாள் செலவுக்கு ஒச்சுபாலு உள்ளிட்டோர் ரூ.50 ஆயிரம் கேட்டதாகவும், பணம் தர மறுத்த ஆத்திரத்தில் தன்னை ஒச்சுபாலு உள்ளிட்ட 11பேர் கும்பல் கடத்திச் சென்று மிரட்டி அடித்து படுகாயப்படுத்தியதாகவும் மோகன்தாஸ் காந்தி ஐகோர்ட் கிளையில் புகார் தெரிவித்தார். ஐகோர்ட் கிளை உத்தரவில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிந்து ஆக.6ல் ஒச்சுபாலுவை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து மதுரை வடக்குமாசிவீதியைச் சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் குமார்(45), ஒச்சுபாலு மீது மேலும் ஒரு புகார் தெரிவித்தார். இதில், கரிமேடு பகுதியில் தான் கட்டிவரும் வீட்டை, நிலத்துடன் ஒச்சுபாலு பெயருக்கு மாற்றிக் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்திருந்தார். இதன்பேரில் கரிமேடு போலீசார் ஆக.11ல் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த இரு வழக்குகளின் அடிப்படையில் ஒச்சுபாலுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 17 .08 .2011 அன்று மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.
இதையடுத்து இதற்கான உத்தரவு நகல் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒச்சுபாலுவிடம் வழங்கப்பட்டது.
மதுரையில் இதுவரை அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், விகே குருசாமி என அடுத்தடுத்து மூன்று திமுகவினர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். திமுகவினர் மட்டுமே கைது செய்யப்படுவதாக மக்கள் மத்தியில் உணர்வு ஏற்பட்டுவிடக்கூடும் என்பதற்காக தூத்துக்குடி ரவுடி தம்பிராஜா உள்பட 4 ரவுடிகள் இடையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மீண்டும் திமுகவினரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கையை மதுரை போலீஸ் துவக்கியுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக நேற்று ஒச்சுப்பாலு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment