கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 11, 2011

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா மனு மீது 12ல் நீதிமன்றம் தீர்ப்பு


சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிப்பது குறித்து வரும் 12ம் தேதி தீர்ப்பு கூறப்படுகிறது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சாட்சிகளிடம் விசாரணை முடிந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவியல் சட்டம் 313ன் கீழ் ஆஜராகி விளக்கம் அளிக்கும் நிலையில் வழக்கு உள்ளது.
இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருப்பதால் ஜெயலலிதா நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். அல்லது அவரிடம் விடியோ கான்பரன்சிங் மூலம் விளக்கம் பெற வேண்டும் என்று கோரி, அவரது வழக்கறிஞர் குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனு மீது 08.08.2011 அன்று விசாரணை நடைபெற்றது.
வழக்கறிஞர் குமார் வாதிடுகையில், �தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கிறது. அடுத்த மாதம் 14ம் தேதி வரை கூட்டத்தொடர் உள்ளதால், ஜெயலலிதாவால் வர இயலாது. எனவே, விடியோ கான்பரன்சிங்கில் அவரிடம் விளக்கம் பெற அனுமதிக்க வேண்டும்� என்றார்.
அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வாதிடுகையில், �ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு கோரி 2003ம் ஆண்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரி பிரச்னையால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், கர்நாடக அரசு அளிக்கும் பாதுகாப்பு தொடர்பாக சந்தேகம் எழுப்பியும் அவர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அதற்கு கர்நாடக அரசு அட்வகேட் ஜெனரல் வாயிலாக அளித்த பதிலில் ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வரும்போது முழுமையான பாதுகாப்பு தருவோம் என தெரிவித்திருந்தது. எனவே, அவர் ஆஜராவதில் கஷ்டமேயில்லை� என்றார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா வரும் 12ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment