சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கோரி சுப்ரீம் கோர்ட்டில் முதல்வர் ஜெயலலிதா அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சசிகலா, இளவரசி சார்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த பெங்களூர் தனி கோர்ட் நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 6&ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தமிழகத்தில் 91 முதல் 96 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்க பெங்களூர் தனி கோர்ட்டில் 2004&ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த மாதம் 27&ம் தேதி தனி கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சசிகலா, இளவரசி மட்டும் நேரில் ஆஜராயினர். உடல்நிலை காரணமாக சுதாகரன் ஆஜராகவில்லை.
சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் எழுத்து மூலமாகவோ அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலமாகவோ கோர்ட் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள் கடந்த 12&ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வழக்கின் விசாரணை அதிகாரியான நல்லம்ம நாயுடுவிடம் மறுவிசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது. அந்த மனு, தனி கோர்ட் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்பு 20.08.2011 அன்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் அவரது வக்கீல் ஏ.கந்தசாமி ஆஜராகி, புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘வழக்கில் நேரில் ஆஜராவதில் விலக்கு கோரி தனி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் இந்த மாத இறுதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் வரவிருப்பதால் மூன்று வார காலம் இந்த வழக்கு தொடர்பாக தனி கோர்ட்டில் எந்த விசாரணையும் மேற்கொள்ள கூடாது’ என்று கோரப்பட்டிருந்தது. அடுத்த வாய்தா கேட்பதை எதிர்த்த அரசு வக்கீல் ஆச்சார்யா, �உச்ச நீதிமன்ற விசாரணை ஒருபுறம் இருந்த போதிலும், செப்டம்பரில் ஏதாவது ஒரு தேதியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கான உத்தரவை தனி நீதிமன்றம் பிறப்பிக்கலாம்� என்று கோரினார். இருப்பினும், இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செப்டம்பர் 6&ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா இதுவரை பல்வேறு காரணங்களை கூறி ஏற்கனவே 113 வாய்தா வாங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாக கூறி சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைக்கும்படி, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் 20.08.2011 அன்று அவர் 114வது முறையாக வாய்தா வாங்கியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா இதுவரை பல்வேறு காரணங்களை கூறி ஏற்கனவே 113 வாய்தா வாங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாக கூறி சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைக்கும்படி, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் 20.08.2011 அன்று அவர் 114வது முறையாக வாய்தா வாங்கியுள்ளார்.
No comments:
Post a Comment