திருவண்ணாமலை மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் தி.மலையில் 19.08.2011 அன்று நடந்தது. நகராட்சி தலைவர் இரா.திருமகன் தலைமை தாங்கினார். இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாண்டியன், உதயசூரியன், லோகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசியதாவது:
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசியதாவது:
கல்வியை அனைவருக்கும் பொதுவானதாக வழங்க வேண்டும் என்ற சீர்திருத்த சிந்தனை அடிப்படையில் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது தான் சமச்சீர் கல்வி திட்டம். இதை முடக்க நினைத்த ஜெயலலிதா தற்போது தோல்வி அடைந்துள்ளார். அவருக்கு, சுப்ரீம் கோர்ட் தக்க பாடம் கற்பித்துள்ளது.
மொழி வாய்ந்தால் தான் இனம் வாழும். எனவே தான் செம்மொழி எனும் அந்தஸ்தை பெற்றுத்தர கருணாநிதி பாடுபட்டார். தற்போது சிவில் வழக்குகளை கிரிமினல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன.
பொய் வழக்கு போடுவதற்கு என்றே ஒரு துறை உருவாக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களை தண்டிப்பதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் ஒருவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு கைது செய்வதும், ஜாமீனில் வெளியே வந்த பிறகும் மற்றொரு வழக்கு போட்டு கைது செய்வதும் ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்தையே காட்டுகிறது.
ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியையே இழந்தவர் கருணாநிதி. ஆனால் இதற்காக ஒரு தீர்மானத்தை போட்ட ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களின் ஆதரவாளர் என யாரும் நம்ப மாட்டார்கள்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கு தூக்கு தண்டனை கூடாது என ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர தயாரா?
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, முன்னாள் எம்எல்ஏக்கள் பெ.சு.திருவேங்கடம், ஆர். சிவானந்தம், மாவட்ட பொருளாளர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர இளைஞரணி அமைப்பாளர் பிரியா விஜயரங்கன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment