கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 5, 2011

உதயநிதி ஸ்டாலின் பற்றி பொய் புகார் : போலீஸ் கமிஷனரிடம் திமுக மனு


உதயநிதி ஸ்டாலின் மீது பொய் புகார் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, போலீஸ் கமிஷனரிடம் திமுக வக்கீல்கள் மனு கொடுத்தனர்.
^1கோடி நஷ்டஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகார் மனுவை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 02.08.2011 அன்று கொடுத்தார். உதயநிதி ஸ்டாலின் மீது பொய் புகார் தந்த ரங்கா ரெட்டி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் அவர் வலியுறுத்தினார். அப்போது, வக்கீல்கள் கிரிராஜன், கே.எஸ்.ரவிச்சந்திரன், அசன் முகமது ஜின்னா, குமரேசன் உடன் இருந்தனர்.
போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ரங்கா ரெட்டி என்பவர் போலீசாரிடம் தந்த புகாரில், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது புகார் கூறியுள்ளார். இது பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இந்த குற்றச்சாட்டை மறுத்து சட்டப்பூர்வ நோட்டீஸ் ரங்கா ரெட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ரங்கா ரெட்டியை உதயநிதி எந்த சந்தர்ப்பத்திலும் சந்தித்ததும் இல்லை. அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொண்டதும் இல்லை. போலி பத்திரம் போன்றவற்றில் எந்தவிதத்திலும் அவருக்கு தொடர்பில்லை. தவறுதலாக, அவரது பெயர் புகாரில் சேர்க்கப்பட்டுள்ளது.
உதயநிதி, சொந்த தொழிலை கவனித்து வருகிறார். அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மை துளியும் இல்லை. அவருடைய புகழை கெடுப்பதற்காகவும், நிம்மதியை குலைக்கவும், பொய் புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு ரங்கா ரெட்டி முழு பொறுப்பு ஏற்க வேண்டியவராகிறார்.
எனவே, ரங்கா ரெட்டி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இத்துடன், ரங்கா ரெட்டிக்கு அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசையும் இணைத்துள்ளேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
உதயநிதி சார்பில் வழக்கறிஞர்கள் குமரேசன், அசன் முகமது ஜின்னா ஆகியோர் ரங்கா ரெட்டிக்கு 01.08.2011 அன்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த நோட்டீசில் அவர்கள் கூறியிருப்பதாவது:
பெரம்பூரில் உங்களுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளைக்கு தானமாக தந்ததாக கூறியிருக்கிறீர்கள். முன்னாள் அமைச்சரும், அவரது ஆட்களும் உங்களை கடத்திச் சென்று, மிரட்டி, நிலத்தை அபகரித்துக் கொண்டதாக கூறியிருக்கிறீர்கள். இதில் உதயநிதி பெயரை தேவையில்லாமல் இழுத்து இருக்கிறீர்கள். உங்களை பார்த்ததே இல்லை என்றும், நீங்கள் கூறிய சம்பவம் பற்றி எதுவும் தெரியாது. எந்தவித தொடர்பும் தனக்கு இல்லை என்றும் உதயநிதி கூறுகிறார்.
அவரைப் பற்றி தவறான தகவலை ஊடகங்களுக்கு தந்து இருக்கிறீர்கள். எந்த தொடர்பு இல்லாத நிலையில் அரசியல் ஆதாயத்துக்காகவும், களங்கம் ஏற்படுத்தவும் அவரது பெயரை புகாரில் சேர்த்து இருக்கிறீர்கள். இதன் மூலம் அவருக்கும், அவரது குடும்பத்தாரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். முழுக்க முழுக்க தொழில், சுற்றுப் பயணத்தில் கவனம் செலுத்தி வரும் அவர் உங்களை பார்த்தது கூட இல்லை. உங்களது பொய் புகாரால் அவரது இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீங்கள் இந்த நோட்டீசைப் பெற்ற 3 நாட்களுக்குள் உடனடியாக உங்கள் புகாரை திரும்ப பெற வேண்டும். பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் உங்களிடம் ^1கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும். மேலும், சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான செலவு உள்ளிட்டவைகளுக்கு நீங்களே பொறுப்பு ஏற்க நேரிடும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
புகார் அளித்த ரங்கா ரெட்டி மீது வழக்குகள் உள்ளன
போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்து விட்டு வெளியே வந்த ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறுகையில், �புகார் கொடுத்த ரங்கா ரெட்டி மீது வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் இருக்கிறது. அவதூறை பரப்பிய ரங்கா ரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது நில மோசடி புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் சமரசம் செய்து கொண்டனர். வழக்கும் பதிவு செய்யவில்லை. திமுகவினர் மீது புகார் வந்தால் மட்டும் ஆதாரமே இல்லாமல் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படுகின்றன. ரங்கா ரெட்டி கொடுத்துள்ளது பொய் புகார் என்பதை நிரூபிப்போம். சட்டப்படி சந்திப்போம். வில்லிவாக்கம் ரயில்வே நிலமும் போலீஸ் நிலையம் இருக்கும் இடமும் தன்னுடையது என்று ரங்கா ரெட்டி கூறுகிறார். இதுபோல் பொய் புகார் கொடுப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment