கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, August 20, 2011

சொத்து குவிப்பு வழக்கு : அமைச்சர் பச்சைமால் நீதிமன்றத்தில் ஆஜர்


சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர் பச்சைமால் நாகர்கோவில் கோர்ட்டில் 19.08.2011 அன்று ஆஜர் ஆனார். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் பச்சைமால். இவர் கடந்த 2001 & 2006ம் ஆண்டு வரை குளச்சல் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். எம்.எல்.ஏ.வாக இருந்த போது பச்சைமால், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2009ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இவரது மனைவி செல்வ அழகியும் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் , 2001 சட்டமன்ற தேர்தலில் பச்சைமால் போட்டியிடும் போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த சொத்து மதிப்பு அறிக்கையில், தனக்கு ளீ25,825மதிப்பிலான சொத்துள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் 2006 தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து மதிப்பு அறிக்கையில், ளீ55லட்சத்து 31 ஆயிரத்து 564 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக கூறியுள்ளார்.
இதன்படி 2001 & 2006 வரை எம்.எல்.ஏ. வாக இருந்த போது பச்சைமாலின் சொத்து மதிப்பு ளீ55லட்சத்து 5 ஆயிரத்து 739 உயர்ந்துள்ளது. இதில் எம்.எல்.ஏ சம்பளம் மற்றும் இதர வரவு செலவுகள் நீங்க லாக ளீ24லட்சத்து 69 ஆயிரத்து 914 கூடுதல் வருவாயாக வந்துள்ளது. இதில் அவரது மனைவியின் பெயரிலும் சொத்துக்கள் உள்ளதால் அவரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளது தெரிய வருகிறது என குற்றப்பத்திரிகையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது பச்சைமால் கோர்ட்டில் ஆஜர் ஆகவேண்டும் என 2 முறை சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் ஆஜர் ஆக வில்லை. கடந்த ஜூலையில் வழக்கு விசாரணை நடந்த போது, பச்சைமால் கண்டிப்பாக ஆகஸ்ட் 19&ம் தேதி நடக்கும் வழக்கு விசாரணையின் போது ஆஜர் ஆக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி 19.08.2011 அன்று சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் பச்சைமால் ஆஜர் ஆவார் என்பதால், கோர்ட்டில் காலை முதல் பரபரப்பு நிலவியது. அதிமுக நிர்வாகிகளும் ஆங்காங்கே கோர்ட் வளாகத்தில் திரண்டு இருந்தனர். காலை 11.10 மணியளவில் பச்சைமால் கோர்ட்டுக்கு வந்தார்.
அவர் வந்த கார் தலைமை குற்றவியல் நீதி மன்ற வளாகத்தில் நின்றதும், காரில் இருந்து வேகமாக இறங்கிய அமைச்சர் பச்சைமாலை அதிமுகவினர் சுற்றி நின்று கொள்ள வேகமாக கோர்ட்டுக்குள் சென்றார். ஏற்கனவே வக்கீல்கள் வேலை நிறுத்தம் காரணமாக, வக்கீல்கள் யாரும் ஆஜர் ஆக வில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி பால்துரை, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதையடுத்து பச்சைமால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

No comments:

Post a Comment