கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

தமிழகத்தில் நிலவும் போக்கு ஜனநாயகத்திற்கு ஏற்படும் ஆபத்து : கலைஞர் பேட்டி
எல்லா கட்சியும் பங்கேற்று கருத்துகளை பரிமாறவே ஆளும் கட்சி விரும்பும். பாராளுமன்றத்திலும் எல்லா கட்சிகளையும் அழைத்து பேசி, மாறுபட்ட கருத்துகளை பேசி முடிவு செய்வோம். தமிழகத்தில் நிலவும் போக்கு ஜனநாயகத்திற்கு ஏற்படும் ஆபத்து என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் 16 .08 .2011 அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதன் பின் திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி எவ்வாறு அமையும்.?
இப்போது எதுவும் சொல்ல இயலாது. திமுக& காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும்.
கூட்டணியில் வேறு கட்சிகள் சேருமா..?
வேறு கட்சிகள் பற்றி எதுவும் இப்போது சொல்ல இயலாது.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதே..?
இவருக்கு என்பதில்லை.. பொதுவாக மரணதண்டனை கூடாது என்ற கருத்தை நீண்டகாலமாக நான் வலியுறுத்தி வருகிறேன். அந்த கருத்து இதற்கும் பொருந்தும்.
திமுக ஆட்சியின் போது அதிமுகவினர் போட்டி சட்டசபை நடத்தியது போல் நீங்கள் நடத்துவீர்களா..?
தமிழக சட்டமன்றத்தில் நடக்கின்ற ஜனநாயக விரோத செயல்களை விளக்க பல முறைகளை கையாளுவோம். இந்த முறை பற்றியும் சிந்திப்போம்.
திமுக கலந்து கொள்ளாவிட்டால், ஒருதலைபட்சமாக அவை நடவடிக்கை இருக்குமே..?
அப்படி நடக்க வேண்டும் என்றுதான் ஆளுங்கட்சி விரும்புகிறது. பொதுவாக எல்லா கட்சியும் பங்கேற்று கருத்துகளை பரிமாறவே ஆளும் கட்சி விரும்பும். பாராளுமன்றத்திலும் எல்லா கட்சிகளையும் அழைத்து பேசி, மாறுபட்ட கருத்துகளை பேசி முடிவு செய்வோம். தமிழகத்தில் நிலவும் இந்த போக்கு ஜனநாயகத்திற்கும் ஏற்படும் ஆபத்து.
விஜயகாந்த், சரத்குமார் உங்களை குறி வைத்து தாக்குகிறார்களே..?
நான் அதுபற்றி பேசி விவகாரத்தை வளர்க்க விரும்பவில்லை.
உண்ணாவிரதம் இருக்க முயன்ற அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டுள்ளாரே..?
இரு தரப்பிலும் பிடிவாதத்தை தளர்த்தி இருக்கலாம்.
கடந்த ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டதாக சுதந்திர தின உரையில் ஜெயலலிதா கூறியிருக்கிறார்....?
சுதந்திர தின உரையில் எப்படி பேசுவதென்று அண்ணா கற்றுக் தந்து இருக்கிறார். அந்த முறையில் இருந்து நாங்கள் என்றும் வழுவியது இல்லை. குடும்ப ஆட்சி, கொடுமையான ஆட்சி என்று ஜெயலலிதா கூறியது என்று கடந்த ஆட்சிப் பற்றி கூறியதெல்லாம் சுதந்திர தின உரையில் பேச வேண்டியதா..? என்று நீங்கள் எண்ணினாலும், உங்கள் பத்திரிகை முதலாளிகள் எண்ணாதது எனக்கு ஆச்சரியம் இல்லை.
குடும்ப ஆட்சி என்று கூறியதற்கு உங்கள் பதில் என்ன.?
குடும்ப வாழ்க்கை அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது தவறான வாதம்.
அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினத் தன்று தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளதே..?
இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதை நேரத்தில் இங்கேயும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாங்கள் இந்திய நாட்டு விடுதலையை வரவேற்று சுதந்திர தினத்தை கொண்டாடியவர்கள். சுதந்திர தினத்தை வரவேற்று நீண்ட கட்டுரை தீட்டியவர் அண்ணா.
ஈழத் தமிழர்கள் கொடுமைகள் பற்றிய குறும்படம் காட்டப்பட்டதே..?
அங்கு நடந்த கொடுமைகளை புகைப்படங்கள் மூலமாக நான் பார்த்தேன். தமிழர் மாமிச மலைபோல் குவிக்கப்பட்டு இருந்ததையும் கண்டேன். போர் என்றால் பொதுமக்கள் சாவது சகஜம். இந்த ஜெயலலிதா கருத்தையும் படித்தேன்.
ஒரே வரிசையில் இடம் கேட்பது சிறுபிள்ளை தனமானது என்று ஒ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறாரே..?
நாங்கள் சிறுப்பிள்ளைகள் தான். பன்னீர்செல்வம் வயதில், அரசியல் அனுபவத்தில் திமுகவில் உள்ளவர்கள் சிறுப்பிள்ளைகள் தான்.
ஆட்சியில் இல்லாத போது, புத்தகம் எழுதுவீர்கள். அதுபோன்ற படைப்பு இப்போது தயாராகிறதா..?
புத்தகம் எழுதி முடித்ததும் வெளியிடப்படும்.
மத்திய அரசு கேட்ட நிதி தரவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே..?
கேட்டதை தந்ததாகவும் கூறினார். இப்போது இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டுமென்று கர்நாடகா நீதிமன்றம் கூறியிருக்கிறதே.?
நீதிபதிகள் சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றுவார்கள்.
ஊழல் வழக்கு காரணமாக ஜெயலலிதா பதவி விலக வேண்டுமென கேட்பீர்களா..?
நான் அதெல்லாம் கேட்கமாட்டேன். அந்த கருத்துகள் ஜெயலலிதாவுக்கு சொந்தமானவை.
சட்டமன்றத்தை புறக்கணிப்பது ஜனநாயக கடமையை தவற விட்டதாக கூறுவார்களே..?
தீயினால் சுட்ட வடுவை விட, நாவினால் சுட்ட வடு கொடுமையானது. என் தம்பிகள் நாவினால் சுடப்படும் போது, அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
குற்றச்சாட்டுகளுக்கு பதில் இல்லாத நிலை ஏற்படுமே..?
அவர்களே பதிவு செய்து கொண்டு பேசியதாக சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சட்டமன்றத்தை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறீர்கள்.. ஆனால் உங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே..?
அவர்களால் முடிந்தது செய்கிறார்கள்.. 5 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.
திமுக மீது தொடர்ந்து நில அபகரிப்பு புகார் நடவடிக்கைகள் எடுத்து கைது செய்கிறார்களே..?
நில அபகரிப்பு புகாருக்கு உரிய நடவடிக்கை என்பது தமிழகத்தில் எங்கையோ சில ஊர்களில் மட்டும் செய்யப்பட்டால் போதாது. முக்கியமாக சிறுதாவூரில், கொடநாட்டில் நடைபெற்றாக வேண்டும்.
மத்தியில் உங்கள் கட்சிக்கு என்று இருந்த மத்திய அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளதே..? அது நிரப்பப்படுமா..?
அதுபற்றி இப்போது பதில் சொல்ல இயலாது.
சட்டமன்றத்தில் இன்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பற்றி பேசியிருக்கிறார்கள்..? இது சரியான மரபா.?
மத்திய அரசு மீது குற்றம் சாட்டுவது, கோரிக்கை வைப்பது, வலியுறுத்துவது தவறான விஷயம் அல்ல.. ஆனால் தனிப்பட்ட முறையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பற்றி யாரெனும் பேசியிருப்பார்களேயானால், அதற்கான பதிலை அழகிரி வழங்குவார்.
அடக்குமுறை தொடர்ந்தால் போராட்டம் தொடரும் என்று கூறியிருந்தீர்கள்..? ஒரு போராட்டம் முடித்திருக்கிறீர்கள் போராட்டம் தொடருமா..?
போராட்டம் நடத்தாமல் விடமாட்டீர்கள் போல் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment