திமுக சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே 19.08.2011 அன்று இரவு நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகர இளைஞரணி அமைப்பாளர் தங்கமணி வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திமுக துணை பொதுப்செயலாளர் துரைமுருகன் எம்எல்ஏ பேசுகையில்,
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தினார்கள். ஆனால் சமச்சீர் கல்வியில் சிக்கி கொண்டார்கள். இந்த நாட்டில் அனைவரும் சமம். கல்வியில் மட்டும் சமமில்லாமல் இருந்தால் எப்படி? என்று தான் திமுக தலைவர் கலைஞர் சமச்சீர் கல்வியை தமிழகத்தில் கொண்டு வந்தார்.
இதனை கொண்டு வர கிட்டத்தட்ட 8 மாத காலமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது சரியா? தவறா? என குழு அமைத்து விசாரித்து இருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு உடனே அமல்படுத்த முடியாது என்று கூறி விட்டார்கள். தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை கொண்டு வந்த வரலாற்றில் திமுக தலைவர் கலைஞரின் பெயரை யாராலும் அகற்ற முடியாது.
தமிழ்நாட்டில் 5 வருடத்திற்கு ஒரு தடவை ஆட்சி மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமாகி வருகின்றன. இந்த தடவை முன்கூட்டியே ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. சட்ட பேரவையில் அரசியல் பேசப்பட்டு வருகின்றன. திமுகவினர் மீதே குற்றம் சாட்டப்பட்டு பேசப்பட்டு வருகின்றன. மக்கள் மன்றத்தில் திமுக தான் எதிர்க்கட்சி. அதிமுக ஆட்சியில் திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த பழி வாங்கும் நடவடிக்கையை திமுக ஏற்றுக் கொள்வது மட்டு மல்லாமல் அதை சந்திக்க தயாராகவும் உள்ளது. கைது நடவடிக்கை திமுகவை மேலும் மேலும் மெருகேற்றுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சேகரன், ராணி, பொருளாளர் கே.கே.எம்.தங்கராஜா, வண்ணை அரங்கநாதன், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள், மகளிரணியினர் கலந்து கொ ண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பா ளர் அருட்செல்வன் நன்றி கூறினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சேகரன், ராணி, பொருளாளர் கே.கே.எம்.தங்கராஜா, வண்ணை அரங்கநாதன், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள், மகளிரணியினர் கலந்து கொ ண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பா ளர் அருட்செல்வன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment