இளைஞர்களை பாதுகாக்கும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
முத்தமிழ் பேரவை அறக்கட்டளை சார்பில் அடையாரில் நாதஸ்வர மேதை திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கலை அரங்கம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் ராஜரத்தினம் பிள்ளை 113&வது பிறந்த நாள் விழா 27.08.2011 அன்று நடைபெற்றது. விழாவுக்கு முத்தமிழ் பேரவை தலைவர் ரமணி தலைமை தாங்கினார். கலை அரங்கை திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்து, திருவிடைமருதூர் பி.எஸ்.வி.ராஜாவுக்கு ராஜரத்தினம் பிள்ளை விருதையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
ராஜரத்தினம் 58 ஆண்டுகள் வாழ்ந்தாலும் அந்த நாட்களில் உலகளவில் பெரும் புகழ் பெற்றார். இளைஞர்கள் புத்தெழுச்சியுடன், சுயமரியாதை உணர்வோடு நடமாட வழிவகுத்தார். தனித்துவத்துடன் திகழ்ந்தார். இசையை தன் உயிராக கருதியவர்களுக்கு, இசைவாணர்களுக்கு உரிய மரியாதை தராததை கண்டு வெகுண்டெழுந்தார். ராஜரத்தினம் யாருக்கும் தலை வணங்காதவர். இசைவாணர்களுக்கு சுயமரியாதை வழங்கினார்.
இளைஞர்களை பாதுகாக்கும் பொறுப்பை நாம் ஏற்றால்தான் வாழும் தலைமுறை புகழ் வாய்ந்த தலைமுறையாக விளங்கும்.
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகையில், �நாதஸ்வரம், தவில் போன்ற பாரம்பரிய இசைக் கலைஞர்களை ஆதரிக்க வேண்டும்� என்றார்.
விழாவில், எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா, ஏ.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் பேசினார்கள். விழாவில் தயாளு அம்மாள், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், டி.ஆர்பாலு எம்பி, குமரி அனந்தன், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், அமிர்தம், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment