கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 22, 2011

கருணாநிதி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும் - திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன்


கருணாநிதி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கூறினார்.
திருவள்ளூர் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக் கூட்டம் திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவில் 19.08.2011 அன்று மாலை நடந்தது. மாவட்ட துணை செயலாளர் நீலகண்டன் தலைமை வகித்தார். நகரமன்ற துணை தலைவர் ராமநாதன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் தனியரசு வரவேற்றார்.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் பேசியதாவது:

ஜாதி வேற்றுமை யின்றி சமத்துவம் அமையவும் தீண்டாமை ஒழியவும் நாம் அனைவரும் ஓர் குலம், ஓர் இனம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த சமச்சீர் கல்வி திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். அவர், எதை செய்தாலும் அதை தடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும் மாணவர்களின் எதிர்காலத்தை சிந்திக்காமல் சமச்சீர் கல்வி திட்டத்தை ஜெயலலிதா தடுத்து நிறுத்தினார். இதுதொடர்பாக நடந்த வழக்கில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என்றும் புத்தங்களை உடனே விநியோகித்து பாடங்களை உடனே தொடங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. ஆனால் நேற்று வரை பள்ளிகளில் பாடபுத்தகங்கள் தரப்படவில்லை.
ரூ.200 கோடி செலவு செய்து 6 கோடி புத்தகம் அச்சடிக்கப்பட்டது. ஆனால் திருவள்ளுவர் படம் உள்ளிட்ட சில பகுதிகளை மறைக்க வேண்டும் என்பதற்காக ரூ.60 லட்சம் செலவு செய்து ஒரு மாதமாக கிழித்தல், அழித்தல் பணி நடந்தது. பொய் வழக்குகள் போட்டு திமுகவை அழித்து விடலாம் என ஜெயலலிதா நினைக்கிறார். 2 பேர் மீது வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்தால், 200 திமுகவினர் தோன்றுவார்கள். எனவே காலங்கள் மாறும். கருணாநிதி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும்.

இவ்வாறு அன்பழகன் பேசினார்.
கூட்டத்தில், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி, மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம், மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி, மணலி நகர செயலாளர் முத்துசாமி, கத்திவாக்கம் நகராட்சி தலைவர் திருசங்கு, மு.க.ஸ்டாலின் நற்சேவை மைய தலைவர் ஆதிகுருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment