திமுக முன்னாள் எம்எல்ஏ சிவாஜி மீதான நில மோசடி புகாரை நடிகை குட்டி பத்மினியும், அவரது மகளும் வாபஸ் பெற்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள நிலத்தை மோசடி செய்ததாக, முன்னாள் எம்.எல்.ஏ. இ.ஏ.பி.சிவாஜி மீது நடிகை குட்டி பத்மினி, மகள் கீர்த்தனா ஆகியோர் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.
இந்த வழக்கு திருவள்ளுர் மாவட்ட எல்லைக்கு உட்பட்டது என்பதால், திருவள்ளூர் மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நிலத்தை வாங்கியதாக கூறப்படும் உமாபதி & நடிகை குட்டி பத்மினி இடையே நேற்று திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சமசரம் ஏற்பட்டதை தொடர்ந்து, குட்டி பத்மினி, கீர்த்தனா ஆகியோர் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றனர்.
அதன்பிறகு நிருபர்களிடம் குட்டி பத்மினி கூறியதாவது:
எனக்கு திமுக மீதோ, கட்சி தொண்டர்கள் மீதோ, சிவாஜி மீதோ தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை. எனது மகள்கள் படிப்புக்காக பணம் தேவைப்பட்டது. அந்த மன உளைச்சலில் இருந்ததால் புகார் கொடுக்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானேன். எனக்கும், நிலத்தை வாங்கிய உமாபதிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. எனக்கு நல்ல நியாயம் கிடைத்துள்ளது.
மைனர் மகள் ரெஜினிகா பெயரில் இருந்த 2 ஏக்கர் நிலத்தை திருப்பி தந்து விட்டனர். கீர்த்தனா பெயரில் இருந்த 2 ஏக்கர் நிலம் கிரயம் செய்து, அதற்கு 24 லட்சம் ரூபாய் என்று பேசி முடிவு செய்யப்பட்டது. கட்சி சார்பு இல்லாமல் நேர்மையாகவும், நியாயமாகவும் போலீசார் நடந்து கொண்டனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்கும் வாபஸ் பெறப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
திமுக வழக்கறிஞர் வெங்கடாசலபதி கூறியதாவது:
நடிகை குட்டி பத்மினி, அவரது மகள் கீர்த்தனா ஆகியோர் புகார் கூறிய நிலத்துக்கும் இ.ஏ.பி.சிவாஜிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் அவர்கள் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டனர். நிலம் மீது ஒப்பந்தம் போட்ட உமாபதிக்கும் குட்டி பத்மினிக்கும் சமரசம் ஏற்பட்டு விட்டது. களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் புகார் கொடுக்கவில்லை என்று குட்டி பத்மினி கூறியதால் வழக்கு முடிவுக்கு வந்தது.

No comments:
Post a Comment