கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, September 1, 2010

மத்திய அரசிடம் வாதாடி மாநில உரிமைகளை பெற்றது திமுகதான் - முதல்வர் கருணாநிதி


முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி&பதில் அறிக்கை:
* அதிமுக அரசு வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசின் உதவியை பெறுவதாக இருந்ததாகவும், அதை தி.மு.க. முட்டுக்கட்டை போட்டுத் தடுத்து விட்டதாகவும் ஜெயலலிதா உங்களைக் குறை கூறியிருக்கிறாரே?
மனச்சாட்சி உள்ளவர்கள் ஜெயலலிதாவின் கூற்றை ஏற்க மாட்டார்கள். 2005ல் அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ளத்தால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் அல்லல்பட்டனர். அக்காட்சிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க சார்பில் உதவிகள் அளித்ததுடன், அ.தி.மு.க. அரசு அப்பொழுது கேட்ட க்ஷீ 1,000 கோடி நிவாரண உதவியை வழங்கிட வேண்டுமென அன்றைய மத்திய அரசுக்கு தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதையும்; அவ்வாறே க்ஷீ 1,000 கோடி மத்திய அரசு வழங்கியதையும், அத்தொகையை வாக்காளர்களுக்கு அளித்து, அதனை 2006 சட்டசபைத் தேர்தலுக்கு ஆதாயமாக்கிக் கொண்டதையும் அவர் மறந்ததுபோல் பாசாங்கு காட்டலாம். மக்கள் மறந்து விடமாட்டார்கள்.
* தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மாநில அரசின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் மத்திய அரசின் அணுகுமுறை இருக்க வேண்டும் என்று இயற்றிய தீர்மானத்தை ஜெயலலிதா கிண்டல் செய்திருக்கிறாரே?
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்னும் முழக்கத்தை தந்து மாநில அரசின் உரிமைகளுக்காக 1970ம் ஆண்டுகளிலேயே மத்திய அரசுடன் வாதாடி உரிமைகளைப் பெறத் தொடங்கியது திமுக என்பதை வரலாறு புரிந்தவர்கள் அறிவார்கள். மத்தியில் தனியொரு கட்சியின் ஆட்சி நிலவும் சூழ்நிலை மாறி பல்வேறு கட்சிகள் இணைந்து உருவாகும் கூட்டாட்சி அமையத் தொடங்கிய பின்னர்தான் தமிழகம் அதிக அளவில் திட்டங்களை பெற்று பயனடைந்து வருகிறது.
1991ல் சந்தர்ப்பவசத்தால் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் தலைமையில் மத்தியில் அமைந்த அரசை மிரட்டி, 2ஆண்டு கால தி.மு.க. ஆட்சியை கலைக்கச் செய்தவர் ஜெயலலிதா.
1998ல் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்ற நிலையில் அவரது கூட்டணியில் வென்று அவர் பிரதமராக நீடிக்க தனது கட்சியின் ஆதரவை அளிப்பதில், அப்போதைய தி.மு.க. அரசைக் கலைக்க ஒப்புதல் தந்தால்தான் அ.தி.மு.க. ஆதரவு தரும் எனக் கூறியவர். அந்த நிபந்தனையைப் பெறுவதற்காகவே ஒப்புதல் தருவதில் காலம் கடத்தி, வாஜ்பாய் நிலைகுலைந்து 13 மாதத்தில் பதவியை ராஜினாமா செய்யக்கூடிய நிலைக்கு ஆளாக்கியவர் ஜெயலலிதா. அவருக்கு மாநில சுயாட்சி & மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் எப்படி புரியும்?.
மாநில நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள திமுக, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து உருவாக்கிய மத்திய அரசிலும், அதன்பின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டு அமைந்துள்ள மத்திய அரசிலும் தமிழகத்தின் நன்மைக்காக 1996&2001, 2006&2010 ஆகிய காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்டுவரும் பல்வேறு திட்டங்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்பதை சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் தி.மு.க சுட்டிக்காட்டி வந்துள்ளது. அண்மையில் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் அடுத்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் அறிவித்ததாக செய்தி வெளியானது.
உடனே மத்திய அரசின் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் எனக் நான் கடிதம் எழுதி வலியுறுத்தியதன் பயனாக, அம்முடிவை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததால்தான் மத்திய அரசு அந்த முடிவை நிறுத்தி வைத்தது என தெரிவித்திருப்பது ஊரை மட்டுமல்ல, உலகத்தையே ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சி.
அதே போல், 1991ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, Òகச்சத்தீவை மீட்பேன்Ó எனச் சபதமிட்டாரே, அந்த சபதத்தை நிறைவேற்றிட அதன்பின் ஆட்சி செய்த ஐந்தாண்டு காலமும் அதற்காக ஒரு சிறு துரும்பையேனும் கிள்ளிப் போட்டிருப்பாரா? அல்லது 2001 முதல் 2006 வரை ஆட்சியில் இருந்த போது, நடவடிக்கை எடுத்தாரா? வாய்ச் சொல்லில் வீரம் பேசும் ஜெயலலிதா கச்சத்தீவு பிரச்னையில் திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை புறந்தள்ளி விட்டு தமிழக மக்களை ஏமாற்றுவது அவரது கோயபல்ஸ் தந்திரத்தையே நினைவூட்டுகிறது.
2004ல் சுனாமியால் மக்கள் பாதிக்கப்பட்டபோது, மாநில அரசை முற்றிலும் புறக்கணித்தாக ஜெயலலிதா கூறுகிறார். மத்திய அரசு தாராளமாக நிதியுதவி வழங்கிட வேண்டுமென திமுக சார்பில் கோரிக்கை வைத்ததுடன், என் சொந்தப் பணம் க்ஷீ 21 லட்சத்தை சுனாமி நிவாரண நிதிக்காக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோட்டையில் மு.க.ஸ்டாலின் வாயிலாக நேரடியாக வழங்கப்பட்டது மாநில அரசை புறக்கணித்த நிகழ்ச்சியா?
ராஜீவ்காந்தி மறுவாழ்வுத் திட்டம், பைகாரா இறுதி நிலை புனல்மின் திட்டம், புதிய தலைமைச் செயலகம் கட்ட அவர் மேற்கொண்ட முயற்சி எல்லாவற்றையும் தடுத்ததாக தி.மு.க மேல் குற்றங்களைச் சுமத்துகிறார். தமிழகத்தில் முழு பலத்தோடு, வானளாவிய அதிகாரத்தோடு ஒரே கையெழுத்தில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை வேலைநீக்கம் செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து கொட்டமடித்து கொண்டிருந்த ஜெயலலிதா, இந்தத் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றுவது எப்படி? அதற்குரிய சாதுர்யம் என்ன என்று சிந்தித்தாரா? செயல்பட்டாரா? இதை எண்ணிப் பார்க்காமல் தி.மு.கவை குறைகூறுவது அவருடைய அறியாமையை படம் பிடித்துக் காட்டுகிறது.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment