கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 10, 2010

திருச்சி தி.மு.க பொதுக்கூட்டம் : கழக முன்னோடிகள் உரை

கலைஞர் ஆட்சியில் பயன்பெறாதவர்கள் யார்? திருச்சி சிவா

பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா,


"முதல்வர் கருணாநிதி இன்று திருச்சியில் தங்கியிருந்த இடத்தில் இருந்து இந்த மேடை இருக்கும் இடத்துக்கு வர சாதாரணமாக 10 நிமிடம் ஆகும். ஆனால் இன்று 2 மணி நேரமாக மக்கள் கடலில் நீந்தி, வழியெங்கும் வயது வேறுபாடு இல்லாமல் இளம் சிறார்கள் முதல் வயது முதிர்த்தவர்கள் வரை நிரம்பியிருப்பதற்கு காரணம் என்ன?


ஒரு நாலரை ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டில் துன்பக்கடலில் ஆழ்ந்திருந்த மக்கள், அன்றைய ஆட்சியர்களின் அடக்குமுறையினால் வேதனை கடலில் மூழ்கிக்கொண்டிருந்த மக்கள், இன்று அதிலிருந்து விடுபெற்று எல்லாம் நிறைபெற்று வாழ்வதற்கு முதல்வர் கருணாநிதிதான் காரணம் என்று நன்றி தெரிவிக்க வந்த கூட்டம்தான் இது.


இந்த கூட்டத்திற்கு வந்திருக்கின்றவர்கள் அனைவரும் திமுக ஆட்சியால் பயன்பெற்றவர்கள். ஆட்சி மாறுகிறபோது, மக்களின் நிலை மாறுகிறது. இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் பாதிக்கப்படாதவர்களே யாரும் இல்லை. தற்போது முதல்வர் கருணாநிதி ஆட்சியில் பயன்பெறாதவர்களே யாரும் இல்லை.


எங்களை விரும்பாதவர்கள் இருக்கலாம். எங்களை விமர்சிப்பவர்கள் இருக்கலாம். சரியாக புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கலாம். அல்லது புரிந்து கொள்ள மறுப்பவர்களாக இருக்கலாம். யாராக இருந்தாலும் நான் வேண்டி விரும்பு கேட்பேன், நாம் வாழுகின்ற இந்த நாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூன்று பேர் மட்டும் பிறந்திருக்காவிட்டால் தமிழன் யாராக இருந்திருப்பான் என்று எண்ணிப் பாருங்கள். இன்றைக்குப் பெற்றிருக்கிற சமத்துவம் இல்லை. உயர்வு இல்லை. இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழகம் என்ற நிலையை அடைந்திருக்கிறதே அது இல்லை என்ற உண்மையை உணர்வார்கள்.


இந்தியாவில் இன்று 15 மாநிலங்களில் நிம்மதி இல்லை. இப்படி மக்கள் எழுச்சியாக கூடுகின்ற வாய்ப்பு அங்கு கிடையாது. மாலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை. ஆனால் தமிழகத்தில் மக்கள் வாழ்வில் நிம்மதி.


தமிழகத்தில் மக்கள் கேட்காமலேயே அவர்களுக்கு தேவையானவை நிறைவேற்றப்படுகிறது என்றால், முதல்வர் கருணாநிதியின் பரந்துபட்ட அனுபவம். தமிழகத்தில் அவர் கால் படாத இடங்களும் இல்லை. அவர் குரல் ஒலிக்காத இடமும் இல்லை. இதனால்தான் ஆட்சி பொறுப்பு முதல்வர் கருணாநிதிக்கு வரும்போதெல்லாம் மக்கள் கேட்காததையெல்லாம் செய்கிறார்" என்றார்.

நெப்போலியனின் பாடல்

பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் நெப்போலியன்,

"இதுபோன்ற கூட்டம் திருச்சியில் இதுவரை கூடுயதில்லை. அப்பேற்பட்ட கூட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று திருச்சியில் காண்கிறார்.


உன் பேனாவில் மை கசிந்தால் பிறக்குமே தினம் ஒரு புதுக் கடிதம்
முதல் பக்க முரசொலியில் அழைக்குமே உரிமையில் உடன் பிறப்பை
உன் எழுத்தில் ஒவ்வொரு வரியும் வைர வைரமாகுமே
கலைஞர் கலைஞர் என்றே இதயம் நாளும் துடிக்குமே
தலைவா தலைவா நீங்கள் இருக்கும் மட்டும் தமிழ் சிறக்குமே
உயிரே உயிரே உலகம் உள்ள வரை உங்கள் பெயர் நிலைக்குமே
கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான் கழகத்தின் உண்மை கோட்பாடுதான் உடன்பிறப்புகள் உன்னோடுதான் தலைவா
கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான் கழகத்தின் உண்மை கோட்பாடுதான் உடன்பிறப்புகள் உன்னோடுதான் தலைவா
தன்மான தலைவா தமிழக முதல்வா வணக்கமுங்க
இந்த தமிழ்நாடே உங்களின் பின்னால் இருக்குமுங்க

இந்த வெற்றிக்கு வழிவகுத்த உங்கள் காலடிக்கு முதல் வணக்கம்
இந்த வெற்றிக்கு தினம் உழைத்த தளபதிக்கும் முதல் வணக்கம்
அன்று வேதனைகள் கண்டபோதும், இன்று வெற்றிகள் பல பெற்றபோதும் இது மாறாத இதயமையா, எங்களின் மனங்களை வெல்லுதையா
கவிதையும், கதையும் உன்னில் சங்கமம், கருத்துள்ள வசனமும் உன்னில் சங்கமம், எழுத்தும் பேச்சும் உன்னில் சங்கமம்
இலக்கண இலக்கியம் உன்னில் சங்கமம், இயல் இசை நாடகம் உன்னில் சங்கமம், இந்திய அரசியல் உன்னில் சங்கமம்
தன்மான தலைவா தமிழக முதல்வா வணக்கமுங்க
இந்த தமிழ்நாடே உங்களின் பின்னால் இருக்குமுங்க." என்றார்

ஜெ.வின் துரோக மனப்பான்மை: பொன்முடி

பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி,


திருச்சியில் இன்று நடக்கும் இந்தக் கூட்டத்தைப் பார்த்தால் ஆறாவது முறையல்ல, என்றென்றும் கலைஞர்தான் முதல்வர் என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கிறது. இதை பொறுக்க முடியாத சில பேர்தான் அவ்வப்போது மலையிலே இருந்து கீழே வருகிறார்கள். கொஞ்ச நேரம் உங்களை எல்லாம் பார்த்துவிட்டு மீண்டும் மலையேறுகிறார்கள். அவர்களுக்கு மேலேயேறுவதும், கீழே இறங்குவதும் அந்தக் காலத்திலிருந்தே தொழில்.


இப்போது அந்த அம்மையார் அரசியல் பேசுவதை விட்டுவிட்டு, கலைஞருடைய குடும்பத்தையும், கலைஞரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதையே தன்னுடைய அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்.


ஜெயலலிதா அறிக்கை விடுகிறார். சேலத்திலே சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம். நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். யார் ஜெயலலிதா பேசலாமா? மனசாட்சி உள்ளவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?


கோவையில் இருந்து சுற்றுலா சென்ற மாணவிகளை தடுத்து நிறுத்தி, தனக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்தற்காக, குற்றவாளி என்று தீர்ப்பளித்ததற்காக அந்த தாக்குதலை நடத்தி ஏவிவிட்ட ஜெயலலிதா, மூன்று மாணவிகளை கொலை செய்வதற்கு காரணமான ஜெயலலிதா, இன்று மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள், அதைப் பார்த்து நான் சும்மா இருப்பேனா என்கிறார்.


அரசு ஊழியர்கள், எஸ்மா டெஸ்மா சட்டத்தைப் பார்த்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

ஜெயலலிதா நீலிக் கண்ணீர் வடிக்கிறார் சத்துணவு ஊழியர்களை பார்த்து. சத்துணவு ஊழியர்களே எண்ணிப் பாருங்கள். கையில் பச்சை குத்தியவர்கள் யார் என்று பார்த்து, அவர்களுக்கு வேலை கொடுத்தார்கள். ஆனால் கலைஞர் அந்த அதிமுகவினரையும் நிரந்தரம் செய்தார்.


ஆனால் ஜெயலலிதா மக்கள் நலப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். சாலை பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். ஜெயலலிதாவுக்கு இருக்கிற துரோக மனப்பான்மை தமிழகத்தில் வேறு எந்த அரசியல் கட்சியினருக்காவது இருக்கிறதா? இவ்வாறு பொன்முடி பேசினார்.

யார் தீய சக்தி? ஜெ.வுக்கு ஆ.ராசா கேள்வி

பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஆ.ராசா,


கம்யூனிஸ தலைவர்கள் இன்று இருக்கிறார்கள் ஜெயலலிதாவோடு, நான் ஜெயலலிதாவுக்கும் சொல்லுகிறேன். அந்த அணிக்கும் சேர்த்து சொல்லுகிறேன். மார்க்சியம் என்றால் பொதுவுடமை என்றால் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம், கல்வி, சுகாதாரம், முதுமையில் பாதுகாப்பு ஆகியவற்றை தந்திருக்கிற முதல்வர் இந்தியாவிலேயே தலைவர் கலைஞர்தான்.


கம்யூனிஸவாதிகளே மறுக்க முடியாது. இவரைப் பார்த்து ஜெயலலிதா சொல்லுகிறார் தீய சக்தி இனிமேல் தீய சத்தி என்று அழைப்போம் என்று. நான் ஜெயலலிதாவுக்கு மிகுந்த அடக்கத்தோடும், மரியாதையோடும் சொல்லிக்கொள்கிறேன். உன்னுடைய தனி மனித வாழ்க்கையை எப்போதும் நான் விமர்சிக்க வேண்டும் என்று எண்ணியதில்லை. அதற்கு எனக்கு வயதும் போதாது. அதற்கு ஆள் இருக்கிறார்கள். ஆனால் ஒன்றை சொல்லுகிறேன். உங்கள் வாழ்க்கையை நீங்கள் சந்தித்தவர்கள். நீங்களே ஒப்புக் கொண்டீர்களே என்னுடைய வாழ்க்கை நிதானமாக போய்க்கொண்டிருக்கிறது சோபன்பாபுவோடு என்று. பேட்டி கொடுத்திருக்கிறீர்களே. அந்த சோபன்பாபு உங்களை நல்ல சக்தி என்று எப்போதாவது ஒப்புக்கொண்டது உண்டா?

எம்ஜிஆர் உங்களை அரசியலில் அடையாளப் படுத்தினாரே? அவர் நோய் வாய்ப்பட்டிருந்தபோது, நோய் வாய்ப்பட்டு மீண்டும் திரும்பியபோது, ராஜீவ்காந்திக்கு

செய்தி அனுப்பி, அவரால் முடியாது. இயக்க முடியாத முதலமைச்சர். என்னை முதலமைச்சராக ஆக்குங்கள் என்று தூது விட்டீர்களே அப்போது எம்ஜிஆர் உங்களை நல்ல சக்தி என்று சொன்னாரா? தீய சக்தி என்று சொன்னாரா? உங்களால் சொல்ல முடியுமா?


வாஜ்பாய் ஒரு மகத்தான இந்திய நாட்டின் தலைவர். கொள்கைகளில் மாறுபாடு இருக்கலாம். அவர் சென்னைக்கு வந்து என்ன சொன்னார். என் வாழ்நாளில் நான் பட்ட அவமானம். தூங்க முடியாத நாட்கள், விழித்திருந்து விழித்திருந்து என் விழிகள் நனைந்த நாட்கள் ஜெயலலிதாவால்தான் வந்தது. வேறு யாராலும் வரவில்லை என்று அந்த மகத்தான மனிதர் சொன்னார். அவர் சொன்னாரா உங்களை நல்ல சக்தி என்று. இவ்வாறு ஆ,ராசா பேசினார்.No comments:

Post a Comment