திமுக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்பு விழா, கலெக்டர் அலுவலக புதிய கட்டிட திறப்பு விழா, பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக மலைக்கோட்டை விரைவு ரயில் மூலம் முதல்வர் கருணாநிதி 08.09.2010 அன்று காலை திருச்சி சென்றார். ரயில் நிலையத்தில் திமுக தொடண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காலை 10 மணிக்கு நடைபெற்ற புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றார். கலெக்டர் அலுவலகம் உட்பட மொத்தம் ரூ.116.48 கோடியில் கட்டப்பட்ட 697 கட்டிடங்களை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி துறையின் கீழ் ரூ.63.35 கோடியில் 8,447 கலைஞர் வீடு வழங்கும் திட்ட வீடுகள் உட்பட மொத்தம் ரூ.192.18 கோடியில் செய்ய உள்ள 13,426 பணிகளுக்கு முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். ரூ.8.38 கோடியில் 7,592 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். பின்னார் மாலை 5 மணிக்கு கரூர் புறவழிச்சாலையில் கலைஞர் அறிவாலயம் அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் சிலையை திறந்து வைத்தார்.
5.30 மணிக்கு மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
No comments:
Post a Comment