கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, September 19, 2010

முதல்வரின் திடீர் பயண மாற்றம்


திமுக முப்பெரும் விழா, விருது வழங்கும் விழா நாளை மாலை 6 மணிக்கு நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் நடக்கிறது.

இந்த விழாவில் திமுக தலைவர், முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு திமுக அறக்கட்டளை சார்பில்மேல்நிலைப்பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நிதி மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறார்.

முரசொலி அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந் தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நிதி மற்றும் சான்றிதழ்களையும், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நற்சான்று, பண முடிப்பு, பதக்கம் ஆகியவற்றையும் வழங்குகிறார்.

இந்த ஆண்டுக்கான பெரியார் விருதை அமைச்சர் வீரபாண்டி ஆறு முகத்திற்கும், அண்ணா விருதை செ.குப்புசாமிக்கும், பாரதிதாசன் விருதை ராஜம்ஜானுக்கும், கலைஞர் விருதை ஜி.எம்.ஷாவுக்கும் வழங்கி கருணாநிதி பேசுகிறார்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் கருணாநிதி தனியார் விமானம் மூலம் சென்னையிலிருந்து இன்று இரவுதிருவனந்தபுரம் சென்று அங்கு தங்கிவிட்டு காலையில் கன்னியாகுமரி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதல்வரின் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திற்கு 7.45க்கு வரும் அவர், இன்று இரவு 9 மணிக்கே கன்னியாகுமரி வந்துவிடுகிறார்.


No comments:

Post a Comment