உலகத் தரம் வாய்ந்த உயர்தொழில்நுட்பத்துடன் உருவாக்கப் பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தினை முதல மைச்சர் கலைஞர் 15.9.2010 அன்று திறந்து வைத்தார்.
மாலை 5 மணி யளவில் இந்த சிறப்புமிகு அண்ணா நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா விற்கு வந்த அனைவரை யும் நூலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென் னரசு, நூலகத் துறை இயக்குநர் அறிவொளி ஆகியோர் வரவேற்றனர்.
இவ்விழாவில், நூலக வளாக முகப்பில் அறி ஞர் அண்ணா புத்தகம் படித்தவாறு அமர்ந்தி ருப்பது போன்ற சிலையை முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத் தார். பின்னர் மிகப் பெரிய நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நூலக வளா கத்தின் பின்புறம் விழா நிகழ்ச் சிக்கான மேடைக்கு வருகை தந்த முதல்வரை வாழ்த்தி வரவேற்றனர். விழா நிகழ்ச்சியின் தொடக்கமாக விழா விற்கு நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழ கன் அவர்கள் தலைமை யேற்க, நூலகத் துறை இயக்குநர் அறிவொளி முன்மொழிந்தார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென் னரசு வரவேற்புரையாற் றிய பின்னர், முதல்வர் கலைஞர் அவர்களுக் கும், நிதியமைச்சர் பேரா சிரியர் மற்றும் தலை மைச் செயலாளர் மாலதி ஆகியோருக்கும் பொன் னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி னார்.
அண்ணா நூற் றாண்டு நூலகம் எனும் மிகப்பெரிய திட்டம் நிறைவேற பாடுபட்ட முதல்வர் கலைஞர் அவர் களுக்கு நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் பொன்னாடை அணி வித்துப் பாராட்டினார். பின்னர் விழாத் தலைமையுரையாற்றினார்.
முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நூலகத் தின் முதல் உறுப்பினர் அட்டையினை பொது நூலகத்துறை இயக்குநர் அறிவொளி வழங்கி னார். பின்னர் அண்ணா நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாக் கல்வெட் டினைத் திறந்து வைத்து முதல்வர் விழாப் பேரு ரையாற்றினார். நிறைவாக, தலைமைச் செயலாளர் மாலதி அய்.ஏ.எஸ். நன்றி கூறிட, விழா இனிதே நிறைவுற் றது. இவ்விழாவில் திராவி டர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீர மணி, எழுத்தாளர் ஜெய காந்தன், கவிப்பேரரசு வைரமுத்து, துணை முத லமைச்சர் மு.க. ஸ்டா லின், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனி மொழி, மத்திய, மாநில அமைச்சர்கள், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், துணை வேந்தர்கள், கல்வியாளர் கள், பொதுமக்கள் ஆகி யோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
No comments:
Post a Comment