மாநில அளவில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு முதல்வர் கருணாநிதி பரிசு வழங்கினார். தமிழக அரசு 22.09.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:
மாநில அளவிலான அதிக மதிப்பெண்கள் பெற்று ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் முதலிடம் பெற்ற ஒரு மாணவர், மாணவி வீதம் தேர்வு செய்து, 10ம் வகுப்புக்கு 6 பரிசுகளும், 12ம் வகுப்புக்கு 6 பரிசுகளும் வழங்கும் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பில் மாநில முதன்மை பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கும் இதுவரை தலாஸீ10 ஆயிரம் வீதமும், 12ம் வகுப்பில் தலா ஸீ25 ஆயிரம் வீதமும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. 2ம் பரிசுகளும், 3ம் பரிசுகளும் இதுவரை வழங்கப்பட்டதில்லை.
நடப்பு ஆண்டு முதல் முதல் பரிசு, 2ம் பரிசு, 3ம் பரிசு என தலா மூன்று பரிசுகளை வழங்கவும், 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களில் முதலிடம் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஸீ10 ஆயிரம் பரிசுத் தொகையை ஸீ25 ஆயிரம் என உயர்த்தி, 2ம் இடம் பெற்றவர்களுக்கு ஸீ20 ஆயிரம், 3ம் இடம் பெற்றவர்களுக்கு ஸீ15 ஆயிரம் என பரிசுத் தொகைகள் வழங்கவும், 12ம் வகுப்பில் முதலிடம் பெற்றவருக்கு வழங்கப்பட்ட ஸீ25 ஆயிரம் பரிசுத் தொகையை ஸீ50 ஆயிரம் என உயர்த்தி, 2ம் இடம் பெற்றவர்களுக்கு ஸீ30 ஆயிரம், 3ம் இடம் பெற்றவர்களுக்கு ஸீ20 ஆயிரம் என பரிசுத் தொகைகள் வழங்கவும் முதல்வர் கருணாநிதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தமிழகத்திலுள்ள பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகப் படித்து 2010 மார்ச்சில் நடந்த 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்த 7 மாணவர்கள், பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 4 மாணவர்கள், கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்த 7 மாணவர்கள் என 18 மாணவர்களுக்கு, மொத்தம் ஸீ3 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலைகளையும்;
12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்த 7 மாணவர்கள், பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 மாணவர்கள், கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்த 7 மாணவர்கள் என 20 மாணவர்களுக்கு மொத்தம் ஸீ6 லட்சத்து 60 ஆயிரத்துக்கான காசோலைகளையும் ஆக 38 மாணவர்களுக்கு மொத்தம் ஸீ10 லட்சத்து 10 ஆயிரத்துக்கான பரிசுத் தொகைகளை, முதல்வர் கருணாநிதி 22.09.2010அன்று வழங்கி வாழ்த்துகள் கூறினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி மற்றும் பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment