கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, September 27, 2010

மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை - அரசு அதிகாரிகளுடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கும் திட்டம் பற்றி, அரசு அதிகாரிகளுடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் 22.09.2010 அன்று நடந்தது.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் எஸ். மாலதி, நிதித்துறைச் செயலர் க.சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலர் டி.பிரபாகர் ராவ், இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தனியார் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், அரசு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் எய்தும் பயிற்சி அளிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி 15&8&2010ல் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, இந்த நிதியாண்டில் 1 லட்சம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் எய்தும் பயிற்சி அளிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களில் பணியமர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, முதற்கட்டமாக ஸீ50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக மாநில திறன் மேம்பாட்டு குழுமத்தின் இரண்டாவது கூட்டம் நேற்று நடந்தது. இந்த திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற இளைஞர்களை தேர்வு செய்து தேவைப்படும் பணியிடங்களுக்கு ஏற்றவாறு, தனியார் நிறுவனங்களில் பணிக்கேற்ற திறன் எய்தும் பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
ஐ.டி.ஐ., பொறியியல் பட்டயம், பட்டதாரிகள், பொறியியல் பட்டம் மற்றும் மேல்படிப்புகள் படித்தவர்களுக்கு, உடனடி வேலைவாய்ப்பு பெறும் பொருட்டு, தனியார் நிறுவனங்களின் தேவைக்கேற்ப உயர்திறன் கொண்ட சிறப்பு பயிற்சிகள் அளித்து, பணியில் அமர்த்தப்படுவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
அதற்காக தானியங்கி, தானியங்கி பாகங்கள் மற்றும் இயந்திரங்கள், கருவிகள், துணி நு£ல் மற்றும் ஆடை, கட்டிடம் மற்றும் கட்டுமான தொழில், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மற்றும் தொலைதொடர்பு உட்பட 15 தொழிற்பிரிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
நேற்று நடந்த கூட்டத்தில் திட்டத்தை செயல்படுத்தும் முன்னோடி தனியார் நிறுவனங்களை கண்டறிவது, வேலை வழங்கும் தனியார் நிறுவனங்களை கண்டறிந்து முடிவு செய்வது, தொழிற்திறன் பயிற்சி அளிக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் குறித்து முடிவு செய்வது, தொழிற்பிரிவு பணிக் குழுக்களுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வது, இந்த குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் முன்னோடி நிறுவனங்களின் பிரதிநிதிகளை தலைவர்களாக நியமிப்பது, மாவட்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது, திட்டத்தை முதல் கட்டமாக தொடங்கி வைப்பது குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
முதற்கட்டமாக, 1 லட்சம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்து, பணியிடங்களை நிரப்பும் வகையில் திறன் எய்தும் பயிற்சியை அந்தந்த நிறுவனங்களிலேயே அளிக்கவும், வேலைவாய்ப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தனியார் நிறுவனங்களோடு, அரசு கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment