நாகர்கோவிலில் நேற்று நடந்த திமுக முப்பெரும் விழாவில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
முப்பெரும் விழாவில் திமுக அறக்கட்டளை, கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை ஆகியவை சார்பில் விருதுகளும், அரசு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகையும், தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில் சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பரிசுத்தொகை ஆகியவையும் வழங்கப்படுகிறது. கடந்த 1999 முதல் 2005 வரை மாணவர்கள் 333 பேருக்கு ஸீ16 லட்சத்து 98,000 வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 20 பேருக்கு தலா ஸீ10,000 வீதம் ஸீ2 லட்சம் வழங்கப்படுகிறது. இதையும் சேர்த்து 353 மாணவர்களுக்கு ஸீ18 லட்சத்து 98,000 திமுக அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாளர் அன்பழகனின் மனைவி வெற்றிச் செல்வி அன்பழகன் பேரில் கண் மருத்துவமனை இயங்குகிறது. 1988 முதல் 2010 வரை இதுவரை 97,315 பேருக்கு இலவச கண் பரிசோதனையும், ஆப்ரேஷனும் செய்யப்பட்டுள்ளது. 2657 பேருக்கு கேட்டிராக்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் கருணாநிதி பெயரால் இயங்கும் அறக்கட்டளைக்கு தனது சொந்த பணம் ஸீ5 கோடியை வங்கியில் வைப்புத்தொகையாக வைத்து, அதன்மூலம் மாதம்தோறும் வரும் வட்டியில் நலிந்த திமுக தொண்டர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2006ம் ஆண்டு 599 பேருக்கு ஸீ34 லட்சத்து 5,000, 2007ம் ஆண்டு 426 பேருக்கு ஸீ36 லட்சத்து 20,000, 2008ம் ஆண்டு 384 பேருக்கு ஸீ38 லட்சத்து 40,000, 2009ம் ஆண்டு 384 பேருக்கு ஸீ38 லட்சத்து 40,000, 2010ம் ஆண்டு 288 பேருக்கு ஸீ28 லட்சத்து 80,000 என மொத்தம் 2081 பேருக்கு 1 கோடியே 75 லட்சத்து 85,000 வழங்கப்பட்டுள்ளது.

முப்பெரும் விழாவை கொண்டாடும்போது, இயக்கத்திற்காக பாடுபட்ட ஒவ்வொருவரையும் தேர்வு செய்து 85ம் ஆண்டு முதல் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் வழங்கப்படுகிறது. 2000 முதல் பாரதிதாசன் விருதும் வழங்கப் படுகிறது.
1985 முதல் 2010வரை 89 பேருக்கு திமுக தலைமை கழகம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு முதல் இந்த விருதுடன் ஸீ10,000 வழங்கப்பட்டது. இது 2003 முதல் ஸீ25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதுவரை 58 பேருக்கு பொற்கிழி விருதுடன் ஸீ10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்த தொகை ஸீ50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதுவரை 62 பேருக்கு பொற்கிழி விருதுடன் ஸீ12 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment