கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 10, 2010

திருச்சியில் அன்பில் சிலை திறப்பு! வாயார, மனமார அழைக்கிறேன்! - முதலமைச்சர் கலைஞர் அழைப்பு


இது குறித்து முதலமைச்சர் கலை ஞர் 06.09.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

08.09.2010 அன்று திருச்சியில் என் அன்பு நண்பர் அன்பில் தர்மலிங்கத்தின் சிலை திறப்பு விழா. அதுபற்றி நினைத் துக் கொண்டிருந்தேன். எத்தனையோ நினைவுகள் அடுக்கடுக்காக என் முன் எழுகின்றன. எனது 87 வயது வாழ்க்கை யில் எனக்கு நெருங்கிய பத்து நண்பர் களைச் சொல் என்றால் அதற்குள் இடம் பெறும் பெயர்களில் ஒன்றுதான் அன்பில் தர்மலிங்கத்தின் பெயர்.

திராவிட நாடு ஏட்டில் அண்ணா

அன்பில் அழைக்கிறார் என்று தலைப்பிட்டு 1956ஆம் ஆண்டு திருச்சி யில் நடைபெற்ற தி.மு.கழக மாநில மாநாட்டுக்கு அறிஞர் அண்ணா திராவிட நாடு இதழில் அழைப்பு விடுத்தார். அதே திருச்சியில் மீண்டும் 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 9, 10, 11 ஆகிய நாள்களில் தி.மு.கழக மாநில மாநாடு நடைபெற்றது. அந்த திருச்சியில்தான் இப்போது அன்பிலுக்கு சிலை திறப்பு விழா! அன்பில் அழைக்கிறார் என்ற தலைப்பில் அண்ணா அழைத்த போது என்ன சொல்லி அழைத்தார் என்பதை நினைவூட்டவா?

முடியுமா? முடியும்! என்று எண்ணு வோரின் தொகையையும், வகையையும், அவர்தம் உறுதியையும், உற்சாகத்தை யும், அவர்தம் உள்ளத்தில் பொங்கி, கண்வழி வழியும் பேரார்வத்தையும் காட்டுகிறேன் வாரீர், என்று அழைக் கிறார், அன்பில்! லட்சக்கணக்கில் கூடப் போகிறார்கள் லட்சிய முழக்கம் கேட்கப் போகிறது. சிங்களத் தீவிலி ருந்தும், திருநெல்வேலிச் சீமையிலிருந் தும் சிங்காரச் சென்னையிலிருந்தும் பிற மாவட்டம் பலவற்றிலிருந்தும் அட லேறுகளும், அவர்கட்குக் காதல் தேனில் வீரத்தைக் குழைத்தளிக்கும் குமரிகளும், வீரரைப் பெற்றெடுத்த தாய்மார்களும், அவர்தம் இளமை வளத்தை எண்ணிக் களித்திடும் முதி யோரும், வரலாறு அறிந்த மாணவர் களும், புதிய வரலாறு காணும் பாட் டாளித் தோழர்களும், அணி அணி யாக வரப் போகிறார்கள்.

கடல் அலையை மிஞ்சிடும் களிப் பொலி எழுப்பியபடி, குடும்பம் குடும்பமாக வரப்போகிறார்கள்குதூகலம் காணப் போகிறார்கள். குன்றெடுக்கும் நெடுந்தோளையும், குளிர்மதிப் பார்வையையும், இன்று கண்டோம் இனி வென்றோம், என்று எவரும் ஆர்வத்துடன் கூறிடத்தக்க வகையில் திரண்டு வருகிறார்கள் திரு இடத்தவர்கள்! காண வாரீர், கட மையை உணர வாரீர்! கருத்தளிக்க வும், காரியமாற்றவும், கலங்கா உள் ளம் படைத்தோரே! திரண்டு வாரீர்! தீரரும் வீரருமான திரு இடத்தினர் எத்துணை எழுச்சியுடன் அணி வகுத்து நிற்கின்றனர் என்பதை எவரும் அறியத்தக்க விதத்திலே வந்து சேருமின்! பெற்றேனே இந்த மக்களை, மாற்றான் எனை ஏச, கூசாது கேட்டுக் கிடந்தனரே குனிந்த தலையுடன் என்னால் சீராட்டி வளர்க்கப்பட்ட இந்த மக்கள் என்று கூறிக் கொண்டிருந்த தாயகம்; இன்று ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சி யையும் வீரத்தையும் கண்டு, கண்ணீ ரைத் துடைத்துக் கொண்டு நான் பெற்ற செல்வங்களே! தீர்ந்ததே என் துக்கம்.

இனி என் தளை உடைபடும் என்ற நம்பிக்கை பிறந்ததடா'' என்று வாழ்த்தி வரவேற்கிறது! அன்னை யின் பணிக்காக அருமந்த மக்காள், அனைவரும் வருக!! என்றெல்லாம் கூறி அழைக்கிறார் அன்பில்!'' என்று அண்ணா அன்று எழுதினார்.

அந்த அன்பிலுக்கு சிலை திறக் கும் நிகழ்ச்சிக்கு உன்னை அழைக்க அண்ணாவும் இல்லை, அந்த அன்பி லும் இல்லை. நான்தான் இருக்கி றேன் உனை அழைக்க. என் வாயார, மனமார உன்னையெல்லாம் திருச் சிக்கு அழைக்கிறேன் இந்த மடலின் மூலமாக!

அண்ணா மறைந்த பிறகு 1990 இல் நடைபெற்ற மாநாட்டின் போது நம்மோடு இருந்த அன்பி லின் மகன் சட்டமன்ற உறுப்பின ராக, இளைஞர் அணியின் நிருவாகி யாக இருந்த தம்பி பொய்யாமொழி யும் இப்போது இல்லை.

திருச்சியில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்ற வரிசையில் அன் பில் தர்மலிங்கத்தில் தொடங்கி, பொன்மலை பராங்குசம், து.ப.அழக முத்து, திராவிடப் பண்ணை முத்துக் கிருஷ்ணன், குளித்தலை முத்துக் கிருஷ்ணன், எம்.எஸ்.மணி, மு.க.து. நடராசன், உப்பிலியாபுரம் அர.நட ராசன், இளமுருகு பொற்செல்வி, திருச்சி பாலகிருஷ்ணன், கஸ்தூரி ராஜ், நகரச் செயலாளராக இருந்த ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி, நாதன் கம் பெனி பாண்டுரங்கம், காமாட்சி. ராபி ஷரீப் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்!

1955ஆம் ஆண்டுவாக்கில் திருச்சி யில் கழகத் தோழர்களிடையே சற்று ஒற்றுமையின்மை ஏற்பட்ட போது, அண்ணா திருச்சிக்கே இனி நான் வர மாட்டேன் என்றொரு முடிவினையெடுத்தார். அன்பில் தர்மலிங்கம் தலைமையில் திருச்சி தோழர்கள் எல்லாம் என்னை அணு கியபோது முதலில் அண்ணா ஒப்புக் கொள்ளாமல், என்னை திருச்சிக்கு அனுப்பி முதலில் அங்கே கழகத்திற்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சி செய்யச் சொன் னார். அவ்வாறே நானும் திருச்சி சென்று அதற்கான செயல்களில் ஈடுபட்ட பின்னர் அண்ணா மகிழ்ந்து, கைத்தறித்துணிகளை விற்பதற்காக கழகம் முடிவெடுத்து திருச்சியில் யார் விற்பது என்ற கேள்வி எழுந்த போது, "திருச்சியில் நானே கைத்தறித் துணி விற்கப் போகிறேன்'' என்று அண்ணா அறிவித்தார்.

ஒரு சம்பவம்

ஒருமுறை தஞ்சை மாவட்டத் தில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் காலையில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு, அன்று மாலை யில் அன்பில் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக ஒப்புக் கொண்டிருந்தேன். திருமணத்திற் காக நான், மாறன், அன்பில் தர்ம லிங்கம், பராங்குசம், பண்ணை முத்து கிருஷ்ணன், குளித்தலை முத்துக் கிருஷ்ணன் ஆகியோர் காரில் போய்க் கொண்டிருந்தோம். அது ஒரு ஆற்றங்கரைப் பாதை.

நாங்கள் அதே கரையில் இரண் டொரு மைல் துரம் சென்று அதற் குப் பிறகு ஒரு பாலத்தைக் கடந்து, அடுத்த கரையில் உள்ள திருமண வீட்டிற்கு வந்தாக வேண்டும். அந்தத் திருமண வீட்டிற்கு எனக்கு முன்பு சென்றாக வேண்டுமென்று விரும்பிய அந்தப் பகுதி மக்கள் ஆற்றிலே இறங்கிச் சென்று கொண் டிருந்தார்கள். எங்கள் கார் பாலத் தைச் சுற்றிக் கொண்டு அடுத்த கரை வழியாக வந்த போது, ஆற்றின் கரையில் ஒரு கூட்டம் நின்றதைக் கண்டு, காரை நிறுத்தி விட்டு, அன் பில் தர்மலிங்கம் அங்கே சென்று என்னவென்று விசாரித்தார்.

ஆற்றில் இறங்கி வந்த இளைஞர் ஒருவன் நீரில் மூழ்கி அவனைத் தூக்கி வந்து போட்டிருந்தார்கள். அவனை மருத்துவமனைக்கு அழைத் துச் சென்றோம். பிழைக்கவில்லை. அவனது உயிரற்ற உடலை அனுப்பி விட்டு திருமண வீட்டிற்குச் சென்று மணவிழாவினை நடத்தி வைத்து விட்டு, கல்லணைக்குத் திரும்பினோம்.

மாலையில் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டுத் திரும்பும்போது, இரட்டை மாட்டு வண்டியில் சென் றால் சுற்றிக் கொண்டு போக வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் இறங்கி எதிரே உள்ள கல்லணைக்குச் சென்று விடலாம் என்று அனைவரும் கூற நானும் தலையை அசைத்து விட்டேன். கொள்ளிடத்தின் குறுக்கே இறங்கி கொஞ்ச தூரம் சென்றிருப் போம். திடீரென இடியுடன் கூடிய மழை. ஆற்றில் வரவர நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. மாறனை அன்பில் தர்மலிங்கம் தன் தோளில் தூக்கிக் கொண்டார். ரத்தினம் என்ற ஒரு தோழர் என்னைத் தூக்கிக் கொண்டார். நேரமாக வெள்ளம் பெருகி, பிழைத்து கரையேறுவோமா என்பது சந்தேகத்திற் குரியதாகி, எப்படியோ நீண்ட போராட் டத்திற்குப் பிறகு இரவு ஒரு மணி அளவில் கரையேறினோம். இதுவும் ஒரு மறக்க முடியாத சம்பவம் ஆகும்.

அன்பில் தர்மலிங்கம் தன் வாழ் நாளில் பல பதவிகளை வகித்தவர். ஊராட்சி மன்றத்தலைவராக, கூட்டுறவு சங்க இயக்குநராக, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக, சென்னை கூட்டுறவு வங்கி இயக்குநராக, திருச்சி மாவட்ட கழகத்தின் செயலாள ராக, சட்டமன்ற உறுப்பினராக, வேளாண்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். என்னுடைய அமைச் சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக மட்டுமல்லாமல், உள் ளாட்சித் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளையும் அவர் பொறுப் பேற்று நடத்தினார்.

அண்ணாவின் அமைச்சரவையி லேயே இடம் பெற்றிருக்க வேண்டிய அன்பிலை; 1971ஆம் ஆண்டு நான் இரண்டாவது முறையாக முதலமைச்ச ராகப் பொறுப்பேற்றிருந்த போது; 8.3.1972 அன்று எனது அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக ஆக்கினேன்.

அன்பிலுக்குப் பெரியார் விருது

1986ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அன்பில் தர்மலிங்கத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பெரியார் விரு தினை என் கையினால் வழங்கி நானே பெருமைப்பட்டுக்கொண்டேன்.

அன்பிலும் நானும் நண்பர்களாக தொடங்கியது அடுத்த தலைமுறையில் தம்பி மு.க.ஸ்டாலினும், அன்பிலின் மகன் பொய்யாமொழியும் நண்பர் களாக இரண்டாம் தலைமுறையில் தொடர்ந்து இப்போது ஸ்டாலினின் மகன் உதயநிதியும், பொய்யாமொழியின் மகன் மகேந்திரனும் நண்பர்களாகித் தொடருகிறது நட்பு. அந்த நட்பின் அடையாளச் சின்னம், அன்பிலின் சிலை யைத் திறக்கத்தான் திருச்சி வருகிறேன்; அங்கே திருச்சி தீரர்களுடன் நீயும் இருப்பாய் என்ற நம்பிக்கையுடன்!

ஆம்; என்னையும் உன்னையும் சிலை வடிவில் நின்று சிரித்த முகத்துடன் அன்பில் அழைக்கின்றார் எத்த னையோ கோபதாபங்கள் எம்மிடையே ஊடல்கள் உறவுகள்! எதையும் உரிமை யுடன் உணர்வு கலந்த உண்மை நட்பு டன் கணமும் பிரியாமல் கண்ணின் கருவிழி போல என்னையும் என் நட்பையும் எம் கழகத்தையும் காத்து நின்ற காவலன் இன்றில்லையெனினும் இதோ தம்பி நேருவின் தளராத உழைப் பின் சின்னமாக தடந்தோள் உயர்த்தி நிற்கும் அந்தத் தங்கத் திருமகனின் பெயரை நெஞ்சில் தாங்கி அன்று திருச்சியில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார் அண்ணா; அன்பில் அழைக்கிறார் என்று! இதோ நானும் அழைக்கின் றேன்! வா! உடன்பிறப்பே! அந்தத் திருநகர் திருச்சியில் சந்திப்போம்!

இவ்வாறு அறிக்கையில் முதல மைச்சர் கலைஞர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment