கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, September 19, 2010

குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டத்துக்கும் உள்நோக்கம் கற்பிப்பதா? - மார்க்சிஸ்ட் கட்சிக்கு முதல்வர் கண்டனம்


முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாரம் ஐந்து நாள் முட்டை வழங்கும் முதல்வருக்கு சில கேள்விகள் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் நாளிதழில் ஒரு செய்தி வந்திருக்கிறது. ஏழை சிறார்களுக்கு வாரம் மூன்று முட்டை வழங்குவதை ஐந்து முட்டைகளாக உயர்த்தி அண்ணா பிறந்தநாளை ஒட்டி நான் விடுத்த அறிவிப்பை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறாமையில் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
கோழிப் பண்ணையாளர்கள் கோரிக்கை வைத்ததாகவும், 24 மணி நேரத்திற்குள் முதல்வரால் அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்றும் உள்நோக்கத்தோடு கூறியுள்ளது. தஞ்சையில் பண்ணையார்களை எதிர்த்துதான் என் அரசியல் வாழ்க்கையே தொடங்கியது. பண்ணையாளர் கோரிக்கைகளை ஏற்று பாவ காரியங்களை செய்தவர்களோடு தோழமை கொண்டுள்ள சகவாச தோஷத்தினால் கெட்ட எண்ணத்தோடு இப்படி எழுதியிருக்கிறார்கள். அந்த நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் சங்கத்தினர் யாராவது நான் அந்த அறிவிப்பை செய்வதற்கு முன்பு என்னை சந்தித்தது உண்டா? ஏதாவது கோரிக்கை அளித்தது உண்டா? அதனை ஏற்பதாக நான் தெரிவித்தது உண்டா? தீக்கதிர் நாளேடு ஆதாரம் வெளியிட தயாரா?
நான் அறிவிப்பு வெளியிட்ட பிறகுதான் அந்த சங்கத்தினர் நன்றி தெரிவிக்க என்னை சந்தித்தனர். அப்போதும், ‘முட்டை உற்பத்தி பெருக அரசு வழி வகுத்துள்ளது. அரசின் பெருந்தன்மையை உணர்ந்து நீங்கள் முட்டை விலையை குறைக்க வேண்டும். அப்போதுதான் திட்டம் தொடரும்’ என்று நான்தான் அவர்களிடம் கண்டிப்பாக தெரிவித்தேன்.
எனது அறிவிப்பில், முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு அதற்கு பதிலாக வாழைப்பழம் வழங்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே வாழை உற்பத்தியாளர் கோரிக்கை ஏற்கப்பட்டதாக தீக்கதிர் சொல்லுமா?
அடுத்து, முட்டையை எப்படி வேக வைப்பது? முட்டை ஓடுகளை எங்கே கொட்டுவது? கொண்டை கடலை தொடர்ந்து வழங்கப்படுமா? அதற்கான செலவுக்கு என்ன செய்வது? என்று மேலும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது அந்த நாளிதழ்.
இப்படிப்பட்ட அவசரக்காரர்களை எண்ணிதான் அரசாணையில் அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணமாக எதிர்ப்பு இருக்கலாம். அதற்காக மக்களுக்கு தேவையான காரியங்களை செய்வதையெல்லாம் சேர்த்து எதிர்த்தால் உங்கள் கட்சியை பற்றி அந்த குழந்தைகளும் பெற்றோரும் என்ன நினைப்பார்கள்?
அதே அறிவிப்புடன் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தேனே, அது யாருடைய கோரிக்கை? அந்த கோரிக்கையை எந்த பண்ணையார்
வைத்ததாக அந்த ஏடு எண்ணுகிறது? அடித்தட்டு மக்களுக்காக பாடுபடுவதாக சொல்லிக் கொள்ளும் ஏடு இந்த அறிவிப்பை பாராட்டி எழுதியிருக்க வேண்டாமா?
பன்றி காய்ச்சலை தடுக்க இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. உடனே ஊசி தயாரிப்பாளர்களுக்காக அந்த திட்டம் அறிவிக்கப்பட்டதாகக் கூறுவதா?
பால் உற்பத்தியாளர்களுக்காக 17 கோடி ஊக்கத் தொகை வழங்கினேன். உடனே பால் உற்பத்தியாளர்களுக்கான கோரிக்கை ஏற்கப்பட்டது என்று அர்த்தம் கற்பிப்பதா?
கலைஞர் காப்பீட்டு திட்டத்தை ஏழையெளிய மக்கள் வரவேற்கிறார்கள். ஜெயலலிதா மட்டும் அந்த திட்டத்திலே 3000 கோடி ரூபாயை யாருக்கோ கொடுத்துவிட்டார்கள், அவர்கள் எனது உறவினர்கள் என்றெல்லாம் அறிக்கை விடுகிறார் என்றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நண்பர்களும் அதே பாணியில் மாங்காய் புளித்ததோ, வாய் புளித்ததோ என்ற அளவிற்கு பேசலாமா? எழுதலாமா?
உதாரணத்திற்காக ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். வண்ண தொலைக்காட்சி பெட்டி இலவசமாக வழங்கிட முடிவு செய்தபோது, அதில் ஊழல் நடக்குமென்று பக்கம் பக்கமாக எழுதினார்கள். ஒரு கோடிக்கு மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள் வாங்கியதில் ஒரு சிறு ஊழல் நடைபெற்றதாக கூட யாராவது கூற முடியுமா?
சமூக நலத் துறையின் மூலமாக சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டைகளின் எண்ணிக்கையை மாத்திரமா இந்த அரசு உயர்த்தியிருக்கிறது? அந்த துறையின் சார்பில் கடந்த நான்காண்டுகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் எண்ணிலடங்காதவை.
மக்களுக்கான திட்டங்களை தீட்டும்போது அதில் குற்றம் குறை இருந்தால் அதனை சுட்டிக் காட்டுகின்ற எதிர்க்கட்சியாக இருக்க வேண்டுமே அல்லாமல், எங்கோ ஏதோ என்று எதையோ கூறி எரிச்சலை உமிழ்கின்ற எதிர்க்கட்சிகளாக இருக்கக் கூடாது.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment