இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் மாவட்ட வாரியான கலந்தாய்வு கூட்டம் பின்வரும் தேதிகளில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெறும்.
23 ந் தேதி காலை 10 மணி நீலகிரி; மாலை 4 மணி கோவை
28 ந் தேதி காலை 10 மணி தர்மபுரி வடக்கு, தெற்கு; மாலை 4 மணி புதுக்கோட்டை
29 ந் தேதி காலை 10 மணி கரூர்; மாலை 4 மணி திருச்சி
30 ந் தேதி மாலை 4 மணி சேலம், நாமக்கல்
அக்டோபர் 1 ந்தேதி மாலை 4 மணி சிவகங்கை, விருதுநகர்
4 ந் தேதி மாலை 4 மணி மதுரை புறநகர், மாநகர், ராமநாதபுரம்
6 ந் தேதி மாலை 4 மணி திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு
7 ந் தேதி மாலை 4 மணி பெரம்பலூர், அரியலூர்
8 ந் தேதி மாலை 4 மணி நாகப்பட்டினம், திருவாரூர், தூத்துக்குடி
9 ந் தேதி மாலை 4 மணி தஞ்சாவூர், கடலூர்
11 ந் தேதி மாலை 4 மணி திருநெல்வேலி, விழுப்புரம், திருவண்ணாமலை
12 ந் தேதி மாலை 4 மணி வேலூர், காஞ்சீபுரம்
13 ந் தேதி மாலை 4 மணி கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல்
14 ந் தேதி மாலை 4 மணி திருவள்ளூர், தென்சென்னை, வடசென்னை.
கலந்தாய்வு கூட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டும் கலந்துகொள்வார்கள். கூட்டத்தில் பங்கேற்க வரும் ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் தங்கள் பகுதியில் இதுவரை நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்கள் பற்றிய விவரங்களையும், மினிட் புத்தகத்தையும் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment