திமுக மாணவர் அணிச் செயலாளர் இள.புகழேந்தி நேற்று வெளியிட்ட அறிக்கை:
திமுக முப்பெரும் விழா 20ம் தேதி நாகர்கோவிலில் நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். திமுக அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நிதியளிப்பு & சான்றிதழ், முரசொலி அறக் கட்டளைச் சார்பில் நடத்தப்படும் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நிதியுதவி & சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
திமுக தலைமை கழகத்தின் சார்பில் சேலம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பெரியார் விருதும், தொ.மு.ச. பேரவை தலைவர் குப்புசாமிக்கு அண்ணா விருதும், மகளிர் அணி இணைச் செயலாளர் ராஜம் ஜானுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜி.எம்.ஷா என்பவருக்கு கலைஞர் விருதும் வழங்கி முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்ற உள் ளார்.
பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை ஏற்கிறார். பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
முப்பெரும் விழாவில் திமுக மாணவர் அணித் தோழர்கள் பங்கேற்பது கடமையாகும். மாணவர் அணியினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment