கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 30, 2010

பொதுப்பணித்துறை பணிகள்: கலைஞர் ஆய்வுசென்னை ஜார்ஜ் கோட்டையில் பொதுப்பணித்துறை திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.


முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற பொதுப்பணித்துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.


பொதுப்பணித்துறை திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தபோது, கருணை அடிப்படையில் 144 களப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுப் பணித் துறையின் நீர்வள ஆதாரம் மற்றும் கட்டிடப் பிரிவுகள் மூலம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து முதல்வர் கருணாநிதி செய்தார்.
இந்த ஆய்வின்போது, தலைமை செயலாளர் மாலதி, பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம், நிதித் துறைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொதுப்பணி துறை(நீர்வள ஆதாரம்) மூலம் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்கள், தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
குறிப்பாக, காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளைப் பகுதி மாயனூரில் ரூ.165 கோடியில் கதவணை கட்டும் திட்டத்தை முடிக்க முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தினார்.
தாமிரபரணி, கருமேனி ஆறு, நம்பியாறு இணைப்பு திட்டம் ரூ.369 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட மற்றும் 2ம் கட்டப் பணிகளின் முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்த முதல்வர், இந்தியாவின் முன்னோடி திட்டமாகிய இத்திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றிப் பயனுக்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாலாறு மற்றும் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மணல் எடுத்து வருவதால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளுவதை முழுமையாக தடை செய்வதற்கும், கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் அதிக அளவில் மணல் படிந்திருப்பதால் அங்கிருந்து மணல் எடுப்பதை அனுமதிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் அறிவுறுத்தினார்.
சென்னை மாநகரில் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.633 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளின் முன்னேற்ற நிலைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கவிருப்பதால், மழைக் காலங்களில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை முற்றிலும் அகற்றுவதற்காக இப்பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தினார். தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நிலத்தடி நீரை உயர்த்தும் திட்டப் பணிகள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களுக்கு இத்திட்டத்தின் பயனை விளக்கி அதன்மூலம் அவர்களின் முழு ஒத்துழைப்போடு பணிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்றும், இத்திட்டத்திற்கான வழிகாட்டி நெறிமுறைகளின்படி பணிகள் நடைபெறுகின்றனவா என்றும் கேட்டறிந்தார்.
மேலும் மண்டலம் வாரியாக திட்ட செலவினங்கள், திட்ட பணிகள் முன்னேற்றம் பற்றியும் ஆய்வு செய்தார்.
சென்னை அரசினர் தோட்டத்தில் கலைவாணர் அரங்கம் கட்டுவதற்கான பணிகளை உடனடியாக தொடங்கி, விரைவாக முடிக்க கூறினார். வெளிச்சந்தையில் சிமென்ட் விலை அதிகரித்துள்ளதால் வேறு மாநிலங்களிலிருந்து அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து நியாயமான விலையில் சிமென்ட் கொள்முதல் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
ஆய்வு முடிவில், பொதுப்பணி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி முழுவதையும் செலவிட்டு, திட்டங்களின் பணிகளை தரமாகவும், உரிய காலத்திற்குள் முடிக்க மாவட்டங்களிலுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment